For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.கைரேகை : ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் டாக்டர் பாலாஜி 3 மணி நேரம் விளக்கம்

ஜெயலலிதா கைரேகை தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி முன் டாக்டர் பாலாஜி ஆஜராகி 3 மணி நேரம் விளக்கமளித்தார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ.கைரேகை சர்ச்சை...ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் டாக்டர் பாலாஜி விளக்கம்- வீடியோ

    சென்னை: சென்னை: ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜராகி 3 மணி நேரம் விளக்கம் அளித்தார். மீண்டும் 27ஆம் தேதியன்று அவர் ஆஜராக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு அமைத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரண கமிஷன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனது விசாரணையைத்தொடங்கியுள்ளது. திமுக டாக்டர் சரவணனிடம் இருந்து விசாரணை தொடங்கியது.

    ஜெயலலிதா கைரேகை தொடர்பாக டாக்டர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் விளக்கமளிக்க விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜரானார்.

    டாக்டர் சரவணன் சந்தேகம்

    டாக்டர் சரவணன் சந்தேகம்

    கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். போஸின் வேட்பு மனுவில் இடம்பெற்றிருந்தது ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக டாக்டர் சரவணன் சந்தேகம் எழுப்பி இருந்தார்.

    ஆவணம் அளித்த சரவணன்

    ஆவணம் அளித்த சரவணன்

    இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை ஆணையத்திடமும் இது தொடர்பான ஆவணங்களை சரவணனன் அளித்திருந்தார்.

    அதில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார்.

    சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்

    சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்

    ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது என்று சரவணன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவர் சரவணனின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றளித்த மருத்துவர் பாலாஜிக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.

    டாக்டர் பாலாஜி விளக்கம்

    டாக்டர் பாலாஜி விளக்கம்

    சம்மனை ஏற்று டாக்டர் பாலாஜி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜரானார். ஜெயலலிதா கைரேகை தொடர்பாக டாக்டர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் விளக்கமளிக்க விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜரானார்.

    ஆவணங்கள் சமர்பித்த பாலாஜி

    ஆவணங்கள் சமர்பித்த பாலாஜி

    ஜெயலலிதா கைரேகை தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி முன் டாக்டர் பாலாஜி ஆஜராகி 3 மணி நேரம் விளக்கமளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்ததாகவும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட சிகிச்சை பற்றிய ஆவணங்களை சமர்ப்பித்ததாக டாக்டர் பாலாஜி கூறினார்.

    மீண்டும் ஆஜராக உத்தரவு

    மீண்டும் ஆஜராக உத்தரவு

    ஜெயலலிதா கைரேகை பெறப்பட்டது குறித்த கேள்விக்கும் நீதிபதியிடம் பதில் அளித்துள்ளதாக டாக்டர் பாலாஜி தெரிவித்தார். பாலாஜி மீண்டும் விசாரணை ஆணையத்தில் வரும் 27ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சரவணன் கூடுதல் மனு

    சரவணன் கூடுதல் மனு

    இதனிடையே வேட்புமனுவில் இருந்த ஜெயலலிதாவின் அனைத்து கைரேகைகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் சரவணன் மனு அளித்துள்ளார். 20 கைரேகைகளையும் தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் என டாக்டர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு அளித்துள்ளார்.

    English summary
    Dr. Balaji today appear for hearing Justice Arumugasamy comission who is investigating Jayalalitha death probe Dr. Balaji appear regarding Jayalalitha finger print impression.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X