For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரி 'பயம்' எதிரொலி.. மகளை மாற்று வேட்பாளராக்கினார் டாக்டர் கிருஷ்ணசாமி!

Google Oneindia Tamil News

Dr Krishnanswamy fields his daughter in Tenkasi
தென்காசி: தென்காசி தொகுதியில் நீ எப்படி ஜெயிக்கிறாய் என்பதைப் பார்த்து விடுகிறேன் என்று மு.க.அழகிரி பகிரங்கமாகவே எச்சரித்துள்ள நிலையில், தென்காசி தொகுதியில தனது மகளை கடைசி நேரத்தில், தனது மகள் டாக்டர் சங்கீதாவை மாற்று வேட்பாளராக்கியுள்ளார் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி, தென்காசி தனி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவரது போட்டி குறித்து மு.க.அழகிரி பகிரங்கமாகவே கடுமையாக விமர்சித்திருந்தார். கிருஷணசாமியை ஒருமையில் விளித்து அவர் விமர்சித்துப் பேசியிருந்தார். மேலும் எனது சொந்தங்கள் அங்கு நிறைய உள்ளனர். நீ அங்கு எப்படி ஜெயிக்க முடியும். டெபாசிட் கூட உன்னை வாங்க விட மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று திடீரென தனது மகள் டாக்டர் சங்கீதாவை மாற்று வேட்பாளராக களம் இறக்கியுள்ளார் கிருஷ்ணசாமி. இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு வேளை தனது மகளை வேட்பாளராக்க அவர் தி்ட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தானே நின்றால் அழகிரி பல உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு ஆட்டததைக் கலைத்து விடலாம் என்ற அச்சத்தில் மகளை நிறுத்தினால், அழகிரி எதிர்ப்பு சற்று குறையலாம் என்ற எதிர்பார்ப்பில் மகளை வேட்பாளராக்க அவர் திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

English summary
PT leader Dr Krishnanswamy's daughter Dr Sangeetha has filed her nomination papers as a proxy candiate in Tenkasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X