For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்களைப் பாதுகாக்க கர்நாடகாவுக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: செப்டம்பர் 9ம் தேதி கர்நாடகத்தில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் தமிழர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. எனவே தமிழர்களைப் பாதுகாக்க கர்நாடகத்திற்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

காவிரிப் பிரச்சினை மீண்டும் வெடித்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து கர்நாடகத்தில் போராட்டம் வெடித்துள்ளது. விவசாயிகளும், பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் வன்முறையும் தலை தூக்கிக் காணப்படுகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 9ம் தேதி கர்நாடகத்தில் மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மாநில காங்கிரஸ் அரசும் கூட மறைமுகமாக பந்த்துக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பந்த் காரணமாக கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி

தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி

தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்து விடும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதைத் தொடர்ந்து, கிருஷ்ண ராஜசாகர் அணையிலிருந்து 10,000 கன அடி வீதமும், கபினி அணையிலிருந்து 5000 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. காவிரியில் தண்ணீர் திறக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்து வந்த கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற ஆணைக்கும், தமிழகத்தின் எதிர்ப்புக்கும் பணிந்து தண்ணீர் திறந்து விட்டிருப்பது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

20,000 கன அடி நீர் திறக்க வேண்டும்

20,000 கன அடி நீர் திறக்க வேண்டும்

கடைமடை பாசனப் பகுதிகளுக்கு நீர் சென்றடைய வேண்டுமானால் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு குறைந்தபட்சம் 20,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். அவ்வாறு தண்ணீர் திறந்து விட வேண்டுமானால் நாள் ஒன்றுக்கு 1.72 டி.எம்.சி. வீதம் 60 நாட்களுக்கு குறைந்தபட்சம் 103.2 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும்.

கர்நாடகம் தர வேண்டியது அதிகம்

கர்நாடகம் தர வேண்டியது அதிகம்

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தாலும், இன்று வரை தமிழகத்திற்கு 103.33 டி.எம்.சி நீரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், சுமார் 20 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழக எல்லைக்கு வந்துள்ளது. எனினும், தமிழகத்திற்கு நடப்பாண்டில் 33 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டிருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருக்கிறார். அவரது கணக்குப்படியே வைத்துக் கொண்டாலும் தமிழகத்திற்கு கர்நாடகம் இன்னும் 80 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்.

13 டிஎம்சி நீர் மட்டுமே கிடைக்கும்

13 டிஎம்சி நீர் மட்டுமே கிடைக்கும்

தமிழ்நாட்டிற்கு அடுத்த 10 நாட்களுக்கு வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் 13 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள தண்ணீரை உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமையிலான காவிரி மேற்பார்வைக் குழுவிடம் முறையிடுவதன் மூலம் தான் பெற முடியும்.

அலட்சியம் காட்டும் தமிழக அரசு

அலட்சியம் காட்டும் தமிழக அரசு

உச்சநீதிமன்றம், அடுத்த 3 நாட்களில் காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டிருந்தது. அதன்படி காவிரி மேற்பார்வைக் குழுவிடம் தமிழக அரசு இன்றைக்குள் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இன்று காலை வரை அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் காவிரி மேற்பார்வைக் குழுவை உடனடியாக அணுக வேண்டும்.

பதட்டம் அதிகரிப்பு

பதட்டம் அதிகரிப்பு

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் பதற்றம் மேலும் அதிகரித்திருக்கிறது. தமிழகத்திலிருந்து கர்நாடகம் செல்லும் பேருந்துகள் இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்த் திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

1991 கலவரம் மறக்க முடியுமா?

1991 கலவரம் மறக்க முடியுமா?

1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தில் தமிழர்களின் உயிர்களும், உடமைகளும் சூறையாடப்பட்டன. அதேபோன்ற நிகழ்வுகள் இப்போதும் நடக்காமல் தடுக்க தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளை அழைத்து வந்து தமிழர்களின் பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has asked the central govt to provide Army protection to safeguard Karnataka Tamils during Sep 9 bandh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X