For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளக்குறிச்சியை மாவட்டமாக்குவது ஓகே.. அப்படியே வேலூரையும் 3 ஆக பிரிங்க.. ராமதாஸ் கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டதற்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தனி மாவட்டமாகிறது கள்ளக்குறிச்சி | ஸ்டெர்லைட் விவகாரம்: சட்டசபையில் திமுக, காங். வெளிநடப்பு- வீடியோ

    சென்னை: முதல் ஆளாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கத்திற்கு வரவேற்பு தந்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!!

    கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்பது ஒரு நீண்ட நாள் கோரிக்கை ஆகும். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    ஆனால் வெறும் பாராட்டுடன் அவர் விடவில்லை. கூடவே ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார். அந்த கோரிக்கையும் பாமகவுக்கு சாதகமாக வரும்படியே பதிவிட்டுள்ளார்.

    வரவேற்பு

    இந்த அறிவிப்பு சம்பந்தமாக ட்விட்டரில் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளதாவது: "விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    திண்டிவனம் தலைநகரம்

    திண்டிவனம் தலைநகரம்

    அதேபோல், திண்டிவனத்தை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தையும் மூன்றாக பிரிக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார். இப்போதைக்கு வட மாவட்டங்களை கையில் வைத்துள்ள பாமக, இப்போது தென் மாவட்டங்களிலும் கவனத்தை செலுத்த போகிறதோ இல்லையா என தெரியவில்லை.

    வேலூரை பிரிங்க

    வேலூரை பிரிங்க

    ஆனால் திண்டிவனம் தனி மாவட்டம், வேலூர் 3-ஆக பிரிப்பது என்பது தன் கட்சியை பலப்படுத்த ராமதாஸ் போடும் கணக்கு ஆகும். இதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தையும் பிரிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது.

    பாமகவுக்கு எளிது

    பாமகவுக்கு எளிது

    இதேபோல மேலும் சில பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பரவலாக நீண்ட கால கோரிக்கை உள்ளது. அவையும் பிரிக்கப்படுமா என்று தெரியவில்லை. ஆனால் பாமகவுக்கு வட மாவட்டப் பிரிவினை என்பது பணிகளை எளிதாக்க உதவும் என்ற கருத்தும் உள்ளது.

    English summary
    PMK Founder Dr.Ramadoss Welcome and Tweet about TN's Kallakurichi District Announcement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X