For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெட்ரோ ரயிலில் ஏகப்பட்ட நாடகம் நடந்திருந்சே… இனி சூட்டிங் வேறயா? டாக்டர் ராமதாஸ் கிண்டல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்பு நடத்த ஒரு மணி நேரத்திற்கு 4 லட்ச ரூபாய் வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் தனது பாணியில் கருத்து வெளியிட்டுள்ளார்.

சென்னையில் 2 வழித்தடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளில், முதற்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் இடைவெளியில் மட்டுமே தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால், எதிர்பார்த்த அளவு பயணிகளிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.

Dr Ramadoss ridicules the permission to shoot in Metro trains

இந்த நிலையில், மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்பு நடத்த தமிழ் திரை துறையினர் ஆர்வத்துடன் இருந்தனர். முதலில் மெட்ரோ ரயில்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டது. ஆனால், டெல்லி மற்றும் மும்பையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே, அதனை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க முடிவு செய்தனர்.
மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்புக்கு ரூ.4 லட்சம் என்று வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நெரிசல் மிகுந்த நேரங்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. காலை நேரத்திலும், நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதிக நேரத்திற்கு மெட்ரோ ரயிலை சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு கேட்கும்போது, தனி ரயிலையே ஒதுக்கிக்கொடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார். ஏற்கனவே தான் மெட்ரோ ரயிலில் ஏகப்பட்ட நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டனவே? என்று கேட்டுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has ridiculed the permission for cinema shootings in Metro trains.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X