For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் பாகிஸ்தானா கர்நாடகா?.. டாக்டர் ராமதாஸ் ஆவேசம்

Google Oneindia Tamil News

சென்னை: அமைதியையும், போர்நிறுத்த உடன்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்று அண்டை நாடுகள் முதல் ஐ.நா. வரை வலியுறுத்திய போதிலும் அதை மதிக்காமல், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை தூண்டிவிட்டு வருகிறது பாகிஸ்தான். அதனால் தான் அந்நாட்டை பலரும் போக்கிலி தேசம் (Rogue Nation) என விமர்சிக்கின்றனர். கர்நாடகமும், பாகிஸ்தானைப் போலவே அரசியல் சட்ட வல்லுனர்கள், உச்சநீதிமன்றம் என யாருடைய அறிவுரையையும் மதிக்காமல் தமிழகத்திற்கு உரிமைப்படி தர வேண்டிய தண்ணீரை தராமலும், தமிழர்களின் உடைமைகளை சூறையாடியும் போக்கிலி மாநிலம் (Rogue State) என நிரூபித்து வருகிறது. இதை மத்திய அரசும் வேடிக்கைப் பார்ப்பது தான் வேதனையளிக்கிறது. மேலும் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா நடுநிலையாக இல்லாமல் இனவெறிக் குழுவின் தலைவராகி விட்டார் என்று பாமக நிறுவனர் டா3க்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கர்நாடகத்தின் இந்த செயலை மத்திய அரசும், பிரதமர் மோடியும் கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதாக சாடியுள்ள ராமதாஸ், பிரதமரின் அமைதி, தமிழகத்திற்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதி என்றும் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

காலில் போட்டு மிதிக்கும் கர்நாடகா அரசு

காலில் போட்டு மிதிக்கும் கர்நாடகா அரசு

தமிழ்நாட்டிற்கு சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக காலில் போட்டு மிதித்திருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்திருக்கிறது. இவை எதுவுமே இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கோ, கூட்டாட்சி தத்துவத்திற்கோ வலிமை சேர்ப்பவையல்ல.

எச்சரித்தும் கூட திருந்தவில்லையே

எச்சரித்தும் கூட திருந்தவில்லையே

காவிரி சிக்கல் குறித்த வழக்கை நேற்று முன்நாள் விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகம் மதித்து தான் ஆக வேண்டும். அவ்வாறு செய்ய கர்நாடகத்திற்கு கடைசி வாய்ப்பு தருகிறோம். இந்த ஆணையை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்தால் அதை செயல்படுத்த வைப்பது எப்படி? என்பது எங்களுக்கு தெரியும் என்று எச்சரித்திருந்தது. அதற்கு பிறகும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம், ஆலோசனை என பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் தர முடியாது என்று கூறியிருக்கிறது.

மறு ஆய்வு மனு

மறு ஆய்வு மனு

அதுமட்டுமின்றி, காவிரி சிக்கலில் கடந்த 10 நாட்களில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் கர்நாடகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும், அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரி மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற ஆணை தவறானது என்றும் கூறி மறு ஆய்வு செய்யக் கோரியிருக்கிறது. கர்நாடகத்தின் இந்த நடவடிக்கைகள் உச்சநீதிமன்றத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் விடப்பட்டச் சவால்கள் என்பதில் ஐயமில்லை.

எப்போதுமே இப்படித்தான்

எப்போதுமே இப்படித்தான்

கர்நாடகத்தின் அணுகுமுறை இப்போது தான் இப்படி என்றில்லை. கடந்த இரண்டு வாரங்களாகவே அம்மாநிலம் உச்சநீதிமன்றத்துடன் மோதலை கடைபிடித்து வருகிறது. காவிரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 6000 கன அடி வீதம் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு செப்டம்பர் 20&ஆம் தேதி ஆணையிட்டது. அதை கர்நாடகம் நிறைவேற்றாத நிலையில், கடந்த 27ஆம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கர்நாடகத்தை மன்னித்த நீதிபதிகள், அடுத்த 3 நாட்களுக்கு அதே அளவு தண்ணீரை திறக்க ஆணையிட்டனர். ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதித்த கர்நாடக அரசு, அதையும் நிறைவேற்றவில்லை. அதன்பின் நேற்று முன்நாள் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது தான் கர்நாடகத்தை நீதிபதிகள் கடுமையாக எச்சரித்திருந்தனர். ஆனால், அதற்கும் பயனில்லை.

இனவெறிக் குழுவின் தலைவராக மாறிய தேவெ கெளடா

இனவெறிக் குழுவின் தலைவராக மாறிய தேவெ கெளடா

கர்நாடகத்தில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அம்மாநிலத் தலைவர்கள் பேசிய கருத்துக்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கு உலைவைக்கக் கூடியவை. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கக் கூடாது; தமிழகத்திற்கு ஒருபோதும் தண்ணீர் வழங்கக் கூடாது என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. மற்றொருபுறம், இந்தியாவின் பிரதமராக இருந்த தேவகவுடா அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக நடந்து கொள்வதற்கு பதிலாக கன்னட இனவெறி குழுவின் தலைவராக மாறி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெங்களூருவில் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். சட்டத்திற்கு எதிரான இப்போராட்டத்திற்கு அம்மாநில முதல்வர் சித்தராமய்யா நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தும் எந்த சட்டத்தை மதித்தும், எந்த தார்மீக நெறிமுறையையும், தர்மத்தையும் பின்பற்றியும் செய்யப்படுகின்றன என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ரவுடி மாநிலம்

ரவுடி மாநிலம்

அமைதியையும், போர்நிறுத்த உடன்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்று அண்டை நாடுகள் முதல் ஐ.நா. வரை வலியுறுத்திய போதிலும் அதை மதிக்காமல், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை தூண்டிவிட்டு வருகிறது பாகிஸ்தான். அதனால் தான் அந்நாட்டை பலரும் போக்கிலி தேசம் (Rogue Nation) என விமர்சிக்கின்றனர். கர்நாடகமும், பாகிஸ்தானைப் போலவே அரசியல் சட்ட வல்லுனர்கள், உச்சநீதிமன்றம் என யாருடைய அறிவுரையையும் மதிக்காமல் தமிழகத்திற்கு உரிமைப்படி தர வேண்டிய தண்ணீரை தராமலும், தமிழர்களின் உடைமைகளை சூறையாடியும் போக்கிலி மாநிலம் (Rogue State) என நிரூபித்து வருகிறது. இதை மத்திய அரசும் வேடிக்கைப் பார்ப்பது தான் வேதனையளிக்கிறது.

அநீதிக்கு எதிராக மோடி பேசவில்லையே

அநீதிக்கு எதிராக மோடி பேசவில்லையே

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டிருந்தால் 12 நாட்களில் தமிழகத்திற்கு 6 டி.எம்.சி தண்ணீர் கிடைத்திருக்கும். ஆனால், கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாததால் தமிழகத்திற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இந்த அநீதிக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார்த்தைக் கூட உதிர்க்கவில்லை.

நடுநிலை தெரியாதவரா பிரதமர்

நடுநிலை தெரியாதவரா பிரதமர்

கடந்த 10 நாட்களில் கர்நாடக அணைகளின் நீர் இருப்பு 26 டி.எம்.சியிலிருந்து 33.22 டி.எம்.சியாக உயர்ந்திருக்கிறது. நேற்றைய நிலவரப்படி கர்நாடக அணைகளுக்கு வினாடிக்கு 7316 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதைக் கொண்டு தமிழகத்திற்கு தாராளமாக தண்ணீர் கொடுத்திருக்கலாம் எனும் போது, அவ்வாறு செய்யாதது ஏன்? என கர்நாடகத்தை பிரதமர் கேட்டிருக்க வேண்டாமா? மேலாண்மை வாரியத்திற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகியவை உறுப்பினர்களை அறிவித்துவிட்ட நிலையில், கர்நாடகம் மட்டும் உறுப்பினரை அறிவிக்கவில்லை. இதை பிரதமர் கண்டித்திருக்க வேண்டாமா? யாருக்கும் சாதகமாக பேசாமல் ஒதுங்கியிருப்பது நடுநிலையல்ல... நியாயத்தின் பக்கம் நிற்பது தான் நடுநிலை என்பதை அறியாதவரா பிரதமர்? என அடுக்கடுக்கான வினாக்கள் எழுகின்றன. ஆனால், அவற்றுக்கு பதிலளிக்க ஆளில்லை என்பது தான் பெருஞ்சோகம்.

இனியும் அமைதி காக்கக் கூடாது

இனியும் அமைதி காக்கக் கூடாது

காவிரி சிக்கலில் மத்தியரசு இனியும் அமைதியாக இருப்பது சரியானதாக இருக்காது. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதேபோல், கர்நாடகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். இவற்றுக்கு கர்நாடக அரசு முட்டுக்கட்டை போட்டால், அம்மாநில அரசை வழிக்கு கொண்டுவர எதை செய்ய வேண்டுமோ, அதை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has slammed former PM Deve Gowda for his support to the Karnataka in Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X