For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாமரையும் இலையும் படருதே…. ட்வீட்டில் கிண்டும் டாக்டர் ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: எந்த ஒரு செய்தியையும் சமூக வலைத்தளத்தில் சட்டென்று பகிர்ந்து வருவது அரசியல் தலைவர்களின் வழக்கமாகிவருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாசும், தன்னுடைய கருத்துக்களை உடனுக்குடன் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியிருப்பது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ், தாமரையும், இலையும் படரும் நேரத்தில் மேல்முறையீடு அபசகுனமோ? என்று பதிவிட்டுள்ளார். டாக்டர் ராமதாஸ் கிண்டல் பதிவுகளை படியுங்களேன்.

அவர் என்ன ஜெயலலிதாவா?

ஊழல் வழக்கில் அஜய் சவுதாலாவுக்கு பிணை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. உடனடியாக பிணை கிடைக்க அவர் என்ன ஜெயலலிதாவா? என்று கேட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

தாமரையும் - இலையும்

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நாள் முதலே பாஜக தலைவர் அதிமுக உடன் இணக்கமான போக்கினை கடைபிடிக்கின்றனர். மூத்த தலைவர் இல.கணேசன் ஜெயலலிதா வழக்கில் கர்நாடாகா அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். இதனையும் கிண்டலடித்துள்ளார் ராமதாஸ்.

என்னா ஸ்பீடுப்பா

கடந்த 8 மாதகாலமாக அரசு இயந்திரம் முடங்கிவிட்டதாக அனைத்து எதிர்கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் ஜெயலலிதா முதல்வராகிவிட்டதாக அரசு செய்திக்குறிப்பில் சேதி வந்துள்ளதாக பதிவிட்டுள்ள ராமதாஸ் அட...அரசு ஓவர்ஸ்பீடில் வேலை செய்கிறதோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் முதுகெலும்பு

தமிழக அரசை கிண்டல் செய்து பதிவிட்டுள்ள ராமதாஸ் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பதிவிட்டுள்ளார். எப்படியோ சமூக வலைத்தளத்தின் மூலமும் ஆளும் கட்சிகளுக்கு எதிராக தனது எதிர்ப்பை காட்டத் தொடங்கிவிட்டார் டாக்டர் ராமதாஸ்.

English summary
PMK founder leader Dr S Ramadoss, tweets about ADMK and BJP alliance in TamilNadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X