For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது நடந்தது என்ன?... ஜெ. பேசிய ஆடியோ ஆணையத்தில் தாக்கல்

மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது ஜெயலலிதா பேசிய ஆடியோ பதிவுகள் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதா பேசிய ஆடியோ விசாரணை ஆணையத்திடம் தாக்கல்

    சென்னை: மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது ஜெயலலிதா பேசிய ஆடியோ பதிவுகள் ஆறுமுகசாமி ஆணையத்தில் டாக்டர் சிவக்குமார் ஒப்படைத்தார்.

    ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நிலை குறைபாடால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

    Dr. Sivakumar submits 2 pendrive which has Jayalalithas speech audio

    இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மக்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது.

    ஆறுமுகசாமிக்கு எழிலகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு அவர் விசாரணை நடத்தி வருகிறார். இதுவரை 25-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்திவிட்டார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவக்குமாரிடம் 2 அல்லது 3 முறை கமிஷன் விசாரணை நடத்திவிட்டது.

    இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது அவர் பேசிய ஆடியோ பதிவுகளை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் டாக்டர் சிவக்குமார் ஒப்படைத்தார். 2 பென்டிரைவ்கள் அடங்கிய ஆடியோ பதிவுகளில் ஜெயலலிதா பேசியது என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.

    English summary
    Dr. Sivakumar submits 2 pendrives which has Jayalalitha's Speech audio while she was in shortness of breath.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X