For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எந்தெந்த ஊரில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர்... வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Google Oneindia Tamil News

நாமக்கல்: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு,இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் இன்று பல மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Draft voters list released today

நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டார். இதன்படி, ஆண் வாக்காளர் 6 லட்சத்து 61 ஆயிரத்து 858 பேரும், பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 89 ஆயிரத்து 20 பேரும், மற்றவர்கள் 110 பேரும் உள்ளனர். மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரத்து 988 வாக்காளர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் டி.ஜி வினய் வெளியிட்டார். இங்கு 17 லட்சத்து 13 ஆயிரத்து 171 வாக்காளர்கள் மொத்தம் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 43 ஆயிரத்து 829 உள்ளனர். பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 69 ஆயிரத்து 203 பேரும், 139 பேர் மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 4 ஆயிரத்து 918 பேர். இதில் ஆண்கள் வாக்காளர்கள் 9 லட்சத்து 40 ஆயிரத்து 408 உள்ளனர். பெண்கள் வாக்காளர்கள் 9 லட்சத்து 64 ஆயிரத்து 479 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 31 பேர் உள்ளனர். இதில் ஆண்களை விட 24 ஆயிரத்து 71 பெண்கள் அதிகம் உள்ளனர். புதிய வாக்காளர்கள் ஓர் ஆயிரத்து 379 பெயர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவஞானம் வெளியிட்டார். இதில் மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 41 ஆயிரத்து 98 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 58 ஆயிரத்து 87 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 82 ஆயிரத்து 874 பேரும், மற்றவர்கள் 137 பேரும் உள்ளனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி வாக்காளர் வரைவுப் பட்டியலை வெளியிட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் வரைவு பட்டியலில் ஆண்கள் 10 லட்சத்து 52 ஆயிரத்து 369 பேரும், பெண்கள் 11 லட்சத்து 612 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 156 பேரும் என மொத்தம் 21 லட்சத்து 53 ஆயிரத்து 137 பேர் உள்ளனர்.

சேலம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் வெளியிட்டார். மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் 27 லட்சத்து 97 ஆயிரத்து 549 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 14 லட்சத்து ஓர் ஆயிரத்து 310 பேரும், பெண்கள் 13 லட்சத்து 96 ஆயிரத்து 178 பேரும், இதர பிரிவினர் 61 பேரும் உள்ளனர்.

நாகர்கோவில் மாவட்டத்தில் ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 52 ஆயிரத்து 285 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 55 ஆயிரத்து 484 பெண் வாக்காளர்களும், 117 இதர வாக்காளர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வேலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டார். அதன்படி மொத்த வாக்காளர்கள் 30 லட்சத்து 35 ஆயிரத்து 377 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 94 ஆயிரத்து 992 பேரும், பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 40 ஆயிரத்து 307 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 78 பேரும் உள்ளனர்.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆர்டிஓ பேபி வெளியிட்டார். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்களும் 2 லட்சத்து 60 ஆயிரத்து 487 ஆண் வாக்காளர்களும், இதர பிரிவினர் 25 பேரும் உள்ளனர். ஆக மொத்தம் 5 லட்சத்து 29 ஆயிரத்து 9 வாக்காளர்கள் உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டார். தஞ்சாவூரில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 18 லட்சத்து 94 ஆயிரத்து 675 பேர் உள்ளனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டார். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தளை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 9 ஆயிரத்து 386 பேரும் பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 32 ஆயிரத்து 97 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 45 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 41 ஆயிரத்து 528 பேரும் வாக்காளர்களாக உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கதிரவன் வெளியிட்டார். இதில்

7 லட்சத்து 38 ஆயிரத்து 782 ஆண் வாக்காளர்களும் 7 லட்சத்து 15 ஆயிரத்து 588 பெண் வாக்காளர்களும், 175 பேர் இதரப் பிரிவினர் என மொத்தம் 14 லட்சத்து 54 ஆயிரத்து 544 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் வரும் 30ம் தேதி வரை பார்வைக்கு வைக்கப்படும்.

English summary
The District Election Officers released the draft voters list for the civic body election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X