For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் எதிரே கி.வீரமணி தலைமையில் போராட்டம்!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குக்கோரி சென்னையில் கி.வீரமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குக்கோரி சென்னையில் கி.வீரமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் அருகே நடக்கும் போராட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட கழகம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கி.வீரமணி தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Dravida Kazhagam did protest against NEET exam near in Chennai collector office

இதில் இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முழக்கமிட்டனர்.

Dravida Kazhagam did protest against NEET exam near in Chennai collector office

அப்போது பேசிய இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் இழைக்கிறது என குற்றம்சாட்டினார். இதைத்தொடர்ந்து பேசிய திருமாவளவன், மருத்துவ கல்வியில் மத்திய அரசு தலையீடுவது வணிக ரீதியாக உள்ளது என சாடினார்.

English summary
Dravida Kazhagam did protest against NEET exam near in Chennai collector office. Thirunavukarasar, Thirumavalavan, Mutharasan, RS Bharathi has participated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X