For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொங்கல் விடுமுறை ரத்து.. மத்திய அரசை கண்டித்து ஜன.,12- ல்ஆர்ப்பாட்டம் - வீரமணி அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்து ஜனவரி 12ஆம் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியிலில் இருந்து நீக்கி அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து ஜனவரி 12ஆம் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதச்சார்பற்ற விழாவான பொங்கல் விழாவிற்கு இதுவரை இருந்துவந்த மத்திய அரசு விடுமுறையை ரத்து செய்து, வேண்டுமானால் தேவைப்படுவோர் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழர் பண்பாட்டின் மீது திணிக்கப்படும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே இது. மத்திய அரசின் இந்துத்துவா கொள்கையின் இன்னொரு வகை திணிப்பும் ஆகும்.

dravidar kazhagam to stage protest against union governenment

உடனடியாக மத்திய அரசு இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் வரும் 12ஆம் தேதி தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என்று அறிவிக்கிறோம். ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்பதே எங்களின் நிலைப்பாடு. இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
dravidar kazhagam to stage protest on january 12th in all districts to withdrawn of central government pongal holiday announcement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X