For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரோட்டில் பெரியார் கைத்தடி, அம்பேத்கர் கண்ணாடியுடன் திவிகவின் ஊர்தி பேரணி!

திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஊர்தி பேரணி துவங்கியது.

By A S Ramesh
Google Oneindia Tamil News

ஈரோடு: தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் ஊர்திப்பேரணி துவங்கியது.

திராவிடர் கழகத்தின் சார்பில் உரிமை முழக்க ஊர்தி பேரணி தொடங்கப்பட்டது. பெரியார் கைத்தடி மற்றும் அம்பேத்கரின் கண்ணாடியுடன் ஈரோடு பெரியார் நினைவு இல்லத்தில் இருந்து பேரணி தொடங்கியது. இந்த பேரணியை திருநங்கை மதுமிதா தொடங்கிவைத்தார்.

Dravidar Vidudhalai Kazhagam Is A 4 Day Rally In Erode

சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக வரும் 12 ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் பேரணியில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளை பரப்ப உள்ளதாக அமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்களை வலியுறுத்தியும் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேரணி நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

English summary
The Dravida Vidudhalai Kazhagam rally was started at Erode Periyar Memorial House on behalf of Dravidar. The rally was started by Transngender Madumitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X