For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியார், அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது சரியா?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் வேண்டுகோள் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழருவி மணியன் வெளியிட்ட அறிக்கையில், தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

தந்தை பெரியார் காங்கிரசில் சிறிது காலம் மட்டுமே இருந்தார். பின்னர் காங்கிரஸை ஒழிப்பதே தன் வாழ்நாள் கடமை என சூளுரைத்தார். சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய தந்தை பெரியார் பின்னாளில் நீதிக்கட்சியின் தலைவரானார்.

திராவிடர் கழகம் உதயம்

திராவிடர் கழகம் உதயம்

பின்னர் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந் தேதி சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், தென்னிந்திய நல உாிமைச் சங்கம் என்பது 'திராடவிடர் கழக 'மாக (DRAVIDIAN ASSOCIATION) மாற்றப்பட்டது.

திராவிட நாடு

திராவிட நாடு

அந்த இயக்கத்தின் நோக்கமாக, திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், பிாிட்டிஷ் செக்ரட்டாி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிாிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை முதற் கொள்கையாக கொண்டிருக்கிறது ' என்றுதான் அறிவிக்கப்பட்டது.

பிரிவினை நாள்

பிரிவினை நாள்

அத்துடன் 1947 ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள் 'திராவிட நாடு ' பிாிவினை நாளாக பெரியாரின் திராவிடர் கழகம் அறிவித்தது.

விடுதலை நாள் அல்ல துக்க நாள்

விடுதலை நாள் அல்ல துக்க நாள்

அதேபோல் நாடு விடுதலை அடைந்ததை தமிழ்நாட்டுக்கு துக்க நாள் என்று கூறி கடைபிடித்தார் தந்தை பெரியார்.

அண்ணா எதிர்ப்பு

அண்ணா எதிர்ப்பு

இதற்கு எதிராகத்தான் அதாவது இந்தியாவின் விடுதலை நாளை துக்க நாளாக அறிவிக்கக் கூடாது என்று கூறி அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிராக போராட்டம்

இந்தியாவுக்கு எதிராக போராட்டம்

பின்னர் இந்திய தேசிய கொடி எரிப்பு, இந்திய அரசியல் சட்டம் எரிப்பு போராட்டங்களை நடத்தியவர் பெரியார். 1957ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியல் சட்டத்தை பல்லாயிரக்கணக்கான திராவிடர் கழகத்தின் எரித்து சிறை சென்ற வரலாற்றை நடத்திக் காட்டியவர் தந்தை பெரியார்.

தமிழ்நாடு தமிழருக்கே

தமிழ்நாடு தமிழருக்கே

தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தவர். டெல்லி ஆதிக்க கண்டன நாளை நடத்திக் காட்டியவர் பெரியார். தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேச வரைபடத்தையே எரித்தவர் தந்தை பெரியார்.

இழிவானது

இழிவானது

இப்படி இந்திய தேசியத்தை ஒருபோதும் ஏற்காதவர். அப்படியான பெரியாருக்கு பாரத ரத்னா விருது என்பது பொருத்தமற்றது என்பதுடன் அவரை இழிவுபடுத்தக் கூடியது என்கின்றனர் திராவிடர் இயக்கத்தினர்.

அண்ணாவுக்கு கொடுக்கலாமே

அண்ணாவுக்கு கொடுக்கலாமே

அதே நேரத்தில் இந்திய சுதந்திர நாளை இன்பநாளாக ஏற்று, இந்திய ஒற்றுமைக்கான "அடைந்தால் திராவிட நாடு! இல்லையேல் சுடுகாடு' என்ற முழக்கத்தை தூக்கி எறிந்து இந்திய அரசுக்குட்பட்ட தமிழ்நாடு என்ற மாநிலத்தின் முதலமைச்சராக சரித்திரம் படைத்த பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்படுவதில் அர்த்தமும் நியாயமும் இருக்கிறது என்கின்றனர் திராவிட கட்சியினர்.

English summary
Dravidian Movement leaders opposed the demand of Bharat Ratna award to Thanthai Periyar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X