அப்துல் கலாம் பெயரில் அறிவுசார் மையம்... நிலம் ஒதுக்க டி.ஆர்.டி.ஒ இயக்குநர் கோரிக்கை- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக உருவாக்கப்படும் அறிவுசார் மையத்துக்கு அரசு கூடுதல் நிலம் கொடுத்தால் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மைய மேம்பாட்டு நிறுவன இயக்குநர் கிரிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது அங்கு நினைவு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

 DRDO director Christopher requested TN government to allot land

இந்தப் பணியை பார்வையிட பாதுகாப்பு ஆராய்ச்சி மைய மேம்பாட்டு நிறுவன இயக்குநர் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிட்டம் பேசிய அவர், வரும் ஜூலை 27ஆம் தேதி கலாம் நினைவு மணிமண்டபம் திறக்கப்படும். அதற்கான வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

அப்துல்கலாம் நினைவாக அறிவுசார் மையம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தமிழக அரசு அறிவுசார் மையம் ஆரம்பிக்க நிலம்கொடுத்தால், அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மைய மேம்பாட்டு நிறுவன இயக்குநர் கிரிஸ்டோபர் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DRDO director Christopher told if Tamilnadu government allot land, knowledge center in the name of APJ abdul kalam will be started as soon as possible.
Please Wait while comments are loading...