• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னும் ஒரு வாரம்தான் என் மகள் உயிருக்கு உத்தரவாதம்... பண உதவிக் கேட்டு கதறும் சென்னை டிரைவர்

By Lakshmi Priya

சென்னை: ஒரு வாரத்திற்குள் தன் மகளின் மாற்று அறுவை சிகிச்சைக்காக போராடும் ஒரு டிரைவரின் கஷ்டங்கள்

"நான் தினந்தோறும் நிறைய பயணிகளை சந்திப்பேன். என்னுடைய தினசரி வாழ்க்கை எப்பொழுதும் ஒரு கடினமான பயணத்துடனே தொடங்கும். என் பெயர் நீதிபதி, நான் ஒரு வாகன ஓட்டுனராக பணிபுரிகிறேன்.

 Driver Has Only a Week To Save Only Daughter’s Life With A Transplant

சென்னையில் என் பணியை திறம்பட செய்து வருகிறேன். எனக்கு 16 வயதில் நிஷா என்ற ஒரு மகள் இருக்கிறாள். ஒரு நாள் காலையில் அவள் எழுந்திருக்கும் போதே தீராத வாந்தியுடனும், கண்கள் முழுவதும் மஞ்சள் நிறத்துடனும் காணப்பட்டாள். உடனே அவளை அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தேன். அவளால் தன்னிச்சையாக நிற்க கூட முடியாமல் ரெம்பவும் பலவீனமாக ஆகிறந்தாள். "

"முந்தின நாள் இரவிலிருந்து அவளுக்கு ஒரே வயிற்று வலி. ஆனால் அவள் அதை கண்டு கொள்ளவில்லை. அது இந்த அளவுக்கு அபாயத்தை உண்டாக்கும் என்று நிஷாவுக்கு தெரியாமல் போய்ச்சு ".

 Driver Has Only a Week To Save Only Daughter’s Life With A Transplant

மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறிவிட்டனர். அவளின் கல்லீரல் செயலிழந்து விட்டது. இனி ஒன்னும் செய்ய முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். ஆனால் ஒரு தந்தையாக தன் மகளின் வாழ்க்கையை அப்படியே விட்டு விட நீதிபதி தயாராக இல்லை.

" எப்படியாவது அவள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று அவளை நாங்கள் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அவர்கள் அவளுக்கு நல்லவிதமாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனால் அவளின் சிகிச்சைக்கு நிறைய செலவாகும் என்று தெரிவித்து உள்ளனர்.

என் மாத வருமானம் வெறும் 4000 மட்டுமே. எப்படி அவளின் உயிரை நான் காப்பாற்ற போகிறேன்". என்று கண்ணீர் வடிக்கிறார் நிஷாவின் தந்தை

நீதிபதி தன் மகளின் உயிரை காப்பாற்ற இருக்கும் வழிகளை எல்லாம் கண்டுபிடித்து போராடி வருகிறார். எப்படியும் தன்னால் முடியும் என்ற முயற்சியை கைவிடாமல் முயன்று வருகிறார். அவளை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூட அவரிடம் போதிய பணம் இல்லை.

" நெருங்கிய நண்பர்கள் மற்றும் மற்ற குடும்பங்களிடமிருந்து பெற்ற உதவியை கொண்டு அவளை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து விட்டார்."

அவரின் கடின உழைப்பும், கடவுள் நம்பிக்கையும் அவரை கைவிடவில்லை. அப்பல்லோ மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் நிஷாவை காப்பாற்றி விடலாம் என்று ஆறுதல் அளித்துள்ளனர்.

" இந்த வாரமே இந்த சிகிச்சையை தொடங்கினால் மட்டுமே நிஷாவின் உயிரை உடனடியாக காப்பாற்ற இயலும். நான் என்னிடம் உள்ள எல்லா நகைகளையும் பொருட்களையும் விற்று விட்டேன். ஆனால் இன்னமும் 30 லட்சம் வரை அறுவை சிகிச்சைக்கு தேவைப்படுகிறது."

நீதிபதி தன் மகளின் உயிரை காப்பாற்ற எல்லா தடைக்கற்களையும் தாண்டி தன் விடாமுயிற்சியையும் விடாமல் போராடி வருகிறார். அவருக்கு போதுமான பணம் கிடைத்தால் தன் மகளின் உயிரை மீட்டெடுத்து விடுவார்.

" நிஷா என் செல்ல மகள். அவள் நன்றாக படிப்பாள். அவள் என் மேல் மிகவும் அன்பாக இருப்பாள். அவளின் அன்பை இழக்க நான் தயாராக இல்லை. எப்பொழுதும் அப்பா அப்பா என்று அவளுக்கு தேவையானதை என்னிடம் தான் கேட்பாள். ஒரு தந்தையாக அவளை இழக்க போறேன் என்று நினைத்தாலே என் மனம் ரணமாக துடிக்கிறது. என் மகளின் உயிரை காக்க விடாமல் நான் போராடுவேன். எனக்கு உதவி செய்யுங்கள். என் மகளின் வாழ்க்கையை காப்பாற்ற உங்களின் ஒவ்வொரு சிறு உதவி போதும். அதுவே பெரும் உதவியாக மாறும் என்ற நம்பிக்கையுடன் உங்களிடம் வந்திருக்கிறேன். "

கண்ணீர் மல்க நிற்கும் நிஷாவின் தந்தைக்கு உதவுங்கள். உங்களால் முடிந்த உதவி அவரை அடையட்டும். செல்ல மகளை உயிருடன் காப்பாற்றி கொடுக்க அவருக்கு உங்கள் உதவிக் கரங்களை நீட்டுங்கள்.

தன் மகளை காப்பாற்ற தைரியமாகப் போராடி வரும் தந்தைக்கு உங்கள் கரங்கள் உதவட்டும்.

ஒரு உயிர் காக்க உதவி செய்வோம்.

 
 
 
English summary
Chennai Driver seeks help from kind hearted people for his 16 years old daughter's liver transplant.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more