For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி புதியவன் கொலையில் 2 பேர் போலீசில் சரண்!

சென்னை வில்லிவாக்கத்தில் வீடு புகுந்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி கொல்லப்பட்டதில் 2 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி வீடுபுகுந்து படுகொலை- வீடியோ

    சென்னை : ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி புதியவன் இன்று காலையில் வீடு புகுந்து படுகொலை செய்யப்பட்டதில் கார் ஓட்டுநர் உள்பட 2 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர்.

    சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வந்த ஏ.ஐ.ஓ.பி.சி ரெயில்வே தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஜே.கே.புதியவன் இன்று காலையில் அவரது வீட்டில் வைத்தே மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த புதியவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    Driver of murdered railway staff Puthiyavan surrendered before police

    புதியவனை கொன்ற மர்ம நபர்கள் யார் என்று போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்த்த போது, புதியவனிடம் ஓட்டுநராக இருந்த பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் பரபரப்பாக பைக்கில் தப்பி செல்லும் காட்சிகள் இருந்தன. இந்த காட்சிகளின் அடிப்படையில் பாஸ்கர் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

    Driver of murdered railway staff Puthiyavan surrendered before police

    இந்நிலையில் தலைமறைவான இருந்த பாஸ்கர் மற்றும் அவரது நண்பன் போலீசில் சரணடைந்துள்ளனர். என்ன காரணத்திற்காக புதியவனை இவர்கள் வெட்டிக் கொன்றனர் என்பது போலீசார் நடத்தும் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும். பட்டபகலில் வீட்டில் வைத்தே கார் ஓட்டுநரால் ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி படுகொலை செய்யப்பட்டது வில்லிவாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Driver Baskaran and a friend of him who involved in railway association secretary Puthiyavan murder which took place today morning at Chennai Villivakkam surrendered before the police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X