For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபாவின் உள்ளே வெளியே.. மீண்டும் வந்தார் ராஜா.. சூப்பர் பதவியுடன்!

தீபா பேரவையின் தலைமை நிலைய மாநில செயலாளராக டிரைவர் ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    டிடிவி தினகரன் மீது ஜெ.தீபா புகார்- வீடியோ

    சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளே வெளியே விளையாட்டு விளையாடி வருகிறார். கணவர் மாதவனை நீக்குவது, வீட்டை விட்டு விரட்டுவது பின் சேர்ப்பதுமாக இருந்தார். இப்போது டிரைவர் ராஜாவை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார்.

    கட்சி மற்றும் பேரவை விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட ராஜா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததாலும், அவர் கொடுத்த விளக்கத்தை ஏற்றும் இன்று முதல் அவர் தீபா பேரவையின் தலைமை நிலைய மாநில செயலாளராக நியமிக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் தீபா.

    ஜெ.தீபா பேரவையிலிருந்தும், ஒட்டுநர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்ட ராஜா மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டு முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா திடீரென பிரபலமானார். அவர் ஜெயலலிதா மரணம், சிகிச்சை குறித்து சந்தேகம் எழுப்பினார். நான்தான் ஜெயலலிதாவின் வாரிசு எனவும் அறிவித்தார்.

    பேரவை தொடங்கிய தீபா

    பேரவை தொடங்கிய தீபா

    ஜெயலலிதாவுடன் உருவ ஒற்றுமை இருந்ததால், ஆரம்ப நாட்களில் தீபா வீட்டு முன்பாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தினமும் திரண்டனர். அவரைச்சுற்றி ஒரு குழுவினரை வைத்துக்கொண்டு அவர்கள் சொற்படி நடக்க ஆரம்பித்தார். கடந்த ஆண்டு ஜெயலலிதா பிறந்த நாளில் எம்ஜிஆர்.அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்தார்.

    ராஜா - மாதவன் மோதல்

    ராஜா - மாதவன் மோதல்

    இதில் தனது கார் ஓட்டுநர் ராஜாவை பொதுச்செயலாளராக்கினார். பின்னர் அவரை நீக்கிவிட்டு எல்லாம் நானே என்றார். இடையில் ஓபிஎஸ்ஸை ஆதரித்து அவருடன் ஜெயலலிதா சமாதியில் புகைப்படம் எடுத்து பேட்டி கொடுத்தார். பின்னர் அவரையும் எதிர்த்தார். இடையில் தீபாவின் கணவர் மாதவனுக்கும் ராஜாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் மாதவன் பிரிந்துச்சென்று தனிக்கட்சி தொடங்கினார்.

    கல் வீச்சு புகார்

    கல் வீச்சு புகார்

    தன்னுடைய வீட்டில் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியதாகவும், தீபா பேரவையிலிருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு போலீசாரிடம் தீபா ஒரு புகார் அளித்தார். ஆனால், போலீசாரின் விசாரணையில் ராமச்சந்திரனை சிக்க வைக்க தீபாவின் கார் ஓட்டுனர் ராஜா அந்த கல்வீச்சு நாடகத்தை அரங்கேற்றியதாக புகார் எழுந்தது.

    ராஜா கைது

    ராஜா கைது

    இது தொடர்பான விசாரணையில் தீபா வீட்டின் 3 காவலாளிகளை போலீசார் கைது செய்தனர். எனவே ராஜா தலைமறைவாக இருந்தார். அந்நிலையில், தனது பேரவையின் முக்கிய நிர்வாகியாக இருந்த ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தீபா நீக்கினார். அதன்பின், மேற்கு மாம்பலத்தில் ஒரு ஆட்டோ டிரைவருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக எழுந்த புகாரில் ராஜாவை மாம்பலம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    கட்சியில் இணைந்த ராஜா

    கட்சியில் இணைந்த ராஜா

    இந்நிலையில், மாதவன் திடீரென தீபாவுடன் இணைந்தார். ஆனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாவை மீண்டும் கட்சியில் இணைத்ததாக தீபா அறிவித்துள்ளார். இன்று காலை புகைப்படத்துடன் ஒரு செய்தியை அனைத்து பத்திரிகை அலுவலகத்துக்கும் தீபா அனுப்பி உள்ளார்.

    போட்டோ உடன் தீபா அறிக்கை

    போட்டோ உடன் தீபா அறிக்கை

    எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் ராஜா இன்று முதல் தலைமை நிலைய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அவருக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏ.வி.ராஜா விளக்கம் கொடுத்ததை ஏற்றுக் கொண்டு இன்று முதல் மீண்டும் கழக மற்றும் பேரவை வளர்ச்சி பணிகளில் ஈடுபடுவார் என்பதை தெரிவிக்கிறேன்.

    கட்சிப்பணியாற்றும் தீபா

    கட்சிப்பணியாற்றும் தீபா

    ஏ.வி.ராஜா கட்சிக்கு குந்தகம் விளைவித்ததாக சொல்லப்பட்ட செய்திகள் நிரூபிக்கப்படாததாலும் கடந்த ஓர் ஆண்டு காலமாக அவர் நீடித்து பேரவை மற்றும் கழக வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்ததாலும் அவருடைய விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏ.வி.ராஜா இன்று முதல் மீண்டும் கழக பணிகள் ஆற்றுவார் என்று தெரிவிக்கிறேன். கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றலாம் என தெரிவிக்கிறேன்.

    மோசடி புகார்கள்

    மோசடி புகார்கள்

    ராஜாவால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தீபாவின் கணவர் மாதவன் ஒரு புகார் அளித்துள்ளார். ராஜா கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக ராமச்சந்திரன் புகார் அளித்துள்ளார். ராஜா மீது பல வழக்குகள் பாயும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த ராஜா மீண்டும் தீபா உடன் இணைந்துள்ளார்.

    தீபாவின் விளையாட்டு

    தீபாவின் விளையாட்டு

    பேரவையில் ஆட்களை சேர்ப்பது, நீக்குவது என தீபா உள்ளே வெளியே விளையாடி வருகிறார். மாதவனை நீக்குவது சேர்ப்பது என விளையாடி தீபா, இப்போது டிரைவர் ராஜாவை சேர்ப்பது நீக்குவது என உள்ளே வெளியே விளையாட்டு விளையாடி வருகிறார் தீபா.

    English summary
    A V Raja Joined Deepa peravai. Raja who was working as car driver of former Tamil Nadu chief minister J Jayalalithaa's niece Deepa Jayakumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X