For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐசியூவில் உயிருக்கு போராடும் சென்னை டிரைவரின் பச்சிளம் குழந்தை.. உதவலாமே ப்ளீஸ்

அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் அன்ஜி என்ற வாகன டிரைவரின் குறை மாதக் குழந்தையை காப்பாற்ற உதவுங்கள்.

சென்னை: அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் அன்ஜி என்ற வாகன டிரைவரின் குறை மாதக் குழந்தையை காப்பாற்ற உதவுங்கள்.

அன்ஜி மற்றும் மங்கம்மா இருவரும் புதிய இளம் பெற்றோர்கள். எல்லோரைப் போலவே அவர்களும் தங்கள் முதல் குழந்தையை இந்த உலகிற்கு கொண்டு வருவதில் மிகவும் கனவுடனும் சந்தோஷத்துடனும் எதிர்நோக்கி காத்திருந்தனர். மே 30, 2018 ஆம் தேதி தான் அவர்களின் செல்ல மகளும் பிறந்தாள். அவர்கள் பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

Driver’s premature baby girl waits for treatment in NICU

முதல் குழந்தை பிறப்பு என்பதால் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் இந்த சந்தோஷத்துடனே கவலையும் தொற்றிக் கொண்டது. அவர்களின் குழந்தை குறை மாதமான ஏழு மாதத்திலேயே பிறந்து விட்டதால் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் வெண்டிலேட்டரில் வைத்து செயற்கை சுவாசம் கொடுத்து வருகின்றனர்.

அந்த பிஞ்சு குழந்தை படும் கஷ்டத்தை பக்கத்தில் இருந்து பார்க்க கூட முடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறுகின்றனர் அவர்கள் பெற்றோர்கள். அவர்களால் அவளை கைகளில் தூக்கி கொஞ்சக் கூட முடியவில்லை. அவள் பிறந்த நாளிலிருந்து அவளை என் மார்போடு அணைத்து தாய்ப்பால் கூட கொடுக்க முடியவில்லை. பிறந்ததிலிருந்து அவள் அவசர சிகிச்சை பிரிவிலயே இருக்கிறாள். அவளது மூக்கில் டியூப்களும், அவளை சுற்றி எலக்ட்ரானிக் கருவிகளும், பேண்டேஜ்களும் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.

Driver’s premature baby girl waits for treatment in NICU

இது நாள் வரை அவளால் சாப்பிடக் கூட முடியவில்லை. அவளின் உடல் நலம் தேறும் வரை அவள் அவசர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுவிட்டனர். அவளின் உடல் நலம் வலுவாகும் போது மட்டுமே அவள் வெளியே அனுமதிக்கப்படுவார் என்கின்றனர் டாக்டர்கள். அவளின் பெற்றோரின் பயமே அவர்கள் குறைந்த நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள். அவர்களால் தன் குழந்தைக்காகும் மருத்துவ செலவை செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள்.

அன்ஜி ஒரு வாகன ஓட்டுனர். அவரின் மாத வருமானம் வெறும் 10,000 ரூபாய் மட்டுமே. இந்த வருமானத்தில் தான் தன் மனைவியையும் வயதான பெற்றோரையும் காத்து வருகிறார். இவரின் வருமானம் முழுவதும் அன்றாட உணவு மற்றும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே சரியாகி விடுகிறது. அவசரத்திற்கு என்று எதுவும் கையில் நிற்பதில்லை என்கிறார். இப்பொழுது தன்னுடைய குழந்தையின் மருத்துவ செலவுக்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து 3 லட்சம் வரை கடன் வாங்கி செலவழித்துள்ளார்.

ஆனால் குழந்தையின் உடல் நலத்தை முற்றிலுமாக குணமாக்கி தன் செல்லக் குழந்தையை ஆரோக்கியமாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல 8 லட்சம் வரை மருத்துவ செலவிற்கு தேவைப்படுகிறது. இந்த பணத்தை கொடுக்க அன்ஜூவால் முடியாது என்பதால் அவர் நம்முடைய உதவியை நாடி வந்துள்ளார்.

Driver’s premature baby girl waits for treatment in NICU

நீங்கள் மங்கம்மா மற்றும் அன்ஜி என்ற பெற்றோர்களுக்கு உதவி செய்ய நினைத்தால் இங்கே உதவிக் கரம் நீட்டுங்கள். அவர்கள் இப்பொழுது தான் புதிதாக ஒரு சந்தோஷத்தை கொண்டு வந்துள்ளனர். அவர்களின் பிஞ்சு குழந்தையை காப்பாற்ற நீங்களும் உதவி செய்யுங்கள். உங்களின் சிறு உதவி அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை மலரச் செய்யும். முடிந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இதனை பகிருங்கள். இதுவும் ஒரு சிறு உதவியே.
உயிர் காக்க உதவி செய்வோம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X