For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுச்சேரி ப்ளஸ் 2 ரிசல்ட்: 87.74% மாணவர்கள் தேர்ச்சி- சரியும் தேர்ச்சி விகிதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் வெளியான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளில் 87.74 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2015ம் ஆண்டினை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.45 சதவீதம் குறைந்திருந்தது. கடந்த இரு ஆண்டுகளாக தேர்ச்சி விகிதம் புதுச்சேரியில் சரிந்து வருகிறது.

வழக்கம் போல் புதுச்சேரியிலும் மாணவிகள்தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பாண்டு மாணவிகளில் 90.95 சதவீதமும், மாணவர்களில் 83.93 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி மாணவர் மார்டின் 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சங்கர வித்தியாலயா மாணவி காயத்ரி, காரைக்கால் நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மீனா கதிஜா ஆகிய இருவரும் 1183 மதிப்பெண்களுடன் 2ம் இடம் பிடித்தனர்.

புதுச்சேரி ப்ளஸ் 2 ரிசல்ட்

புதுச்சேரி ப்ளஸ் 2 ரிசல்ட்

புதுச்சேரியில் இன்று ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை சட்டசபையில் உள்ள தனது அறையில் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். புதுச்சேரி காரைக்கால் பிராந்தியங்களில் 14,285 பேர் ப்ளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 12,533 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 87.74%ஆகும்.

தேர்ச்சி விகிதம் சரிவு

தேர்ச்சி விகிதம் சரிவு

2015ம் ஆண்டை விட 0.41 சதவீதம் குறைவு. கடந்த 2015ல் தேர்ச்சி விகிதம் 1.45 சதவீதம் குறைந்திருந்தது. இதனால் கடந்த இரு ஆண்டுகளாக தேர்ச்சி விகிதம் புதுச்சேரியில் சரிந்துள்ளது. புதுச்சேரியில் 34 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்தாண்டு 35 பள்ளிகள் நூறு சதவிகித தேர்ச்சி பெற்றிருந்தன.

மாணவிகள் அதிக தேர்ச்சி

மாணவிகள் அதிக தேர்ச்சி

நடப்பாண்டு மாணவிகளில் 90.95 சதவீதமும், மாணவர்களில் 83.93 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். வழக்கத்தைபோல் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில அளவில் டாப்

மாநில அளவில் டாப்

பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி மாணவர் மார்டின் 1185 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். சங்கர வித்தியாலயா மாணவி காயத்ரி, காரைக்கால் நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மீனா கதிஜா ஆகிய இருவரும் 1183 மதிப்பெண்களுடன் 2ம் இடம் பிடித்தனர்.
அமலோர்பவம் மேனிலைப்பள்ளி புவனேஸ்வரி, செயின்ட் பேட்ரிக் மேனிலைப்பள்ளி அல்பர்டினா ஆகியோர் 1182 மதிப்பெண்களுடன் 3ம் இடம் பிடித்தனர்.

காரைக்கால் மாணவர்கள்

காரைக்கால் மாணவர்கள்

காரைக்கால் பிராந்தியத்தில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டு 4.3 சதவீதம் மொத்தமாக குறைந்திருந்தது. தற்போது மேலும் 0.65 சதவீதம் குறைந்து 85.88% ஆக உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் தேர்ச்சி விகிதம் கடந்த இரு ஆண்டுகளாக சரிவு நிலையில் உள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

English summary
The overall pass percentage in Plus Two examinations in Puducherry and Karaikal regions has witnessed a drop of 0.41 per cent as compared to last year. Out of the 14,285 students, 12,533 have passed the exams this year with an overall pass percentage of 87.74 per cent against 88.15 per cent last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X