For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடும் வறட்சியால் கவலையில் விவசாயிகள் - பொங்கல் பண்டிகை இனிக்குமா?

நெல்லை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயத்தை போற்றும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் என்பதை கொண்டாடமுடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

Google Oneindia Tamil News

செங்கோட்டை: நெல்லைமாவட்டம் மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதியான தென்காசி தாலுகா,செங்கோட்டை தாலுகா,கடையநல்லூர் தாலுகா ஆகிய பகுதிகளில் சுமார் 35ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்கள் உள்ளன. இதில் முழுக்க முழுக்க நெல் மட்டுமே பயிரிடப்பாட்டு வருகின்றன.

இந்த ஆண்டு கார் மற்றும் பிசான சாகுபடியில் தென்மேற்கு பருவமழையும்,வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனதால் இங்குள்ள குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி,ஸ்ரீமூலபேரி ஆகிய நீர்தேக்கங்களுக்கு தண்ணீர்வரத்து அடியோடு பாதிக்கப் பட்டது.

Drought in Tamil Nadu : No Pongals's Cheer For Farmers

இந்த அணைகள் மூலம் நேரடியாகவும்,மறைமுகமாகவும் 25ஆயிரம் ஏக்கர் நிலங்களில் சுமார் 700ஏக்கர் மட்டுமே பாசன செய்யபபட்டன. ஏராளமான விவசாயிகள் பாசனம் செய்யாமல் ஏற்கனவே கார்சாகுபடி செய்து மழையில்லாமல் பயிர்கள் கருகியதால் வாங்கிய கடனுக்கு பணத்தை திரும்ப செலுத்தமுடியாத நிலை உருவாகியுள்ளது.

கடந்த ஆண்டு பசுமையாக கணப்பட்ட பகுதிகள் இந்த ஆண்டு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில் 92ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளசேதத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள நீர் நிலை ஆதாரங்கள் அனைத்தும் அடியோடு பாதிக்கப் பட்டன.

இதனை மேம்படுத்த அரசும், அதிகாரிகளும் முயற்சி மேற்கொள்ளவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும். குண்டாறு,அடவிநயினார் கருப்பாநதி,ஸ்ரீமூலபேரி ஆகிய நீர்த்தேக்கங்கள் கட்டிய காலத்தில் இருந்து இதுவரை தூர் வாரப்படவில்லை. இதனாலேயே இங்கு நிலத்தடி நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,குளங்கள் தூர் வாரப்பட்டு சீரமைக்கப் பட்டால் மட்டுமே இனி விவசாயிகள் மேமையடைய முடியும் என்கின்றனர்.

இரண்டு போகமும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்கமுடியாமலும் வட்டிக்காட்ட முடியாமலும் இனி அன்றாட செலவுகளுக்கு திணறும் நிலைக்கு தள்ளப்பாட்டுள்ளதாகவும், விவசாயத்தை போற்றும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் என்பதை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தர்போது 36 அடி உயரம் கொண்ட குண்டாறு நீர்த்தேக்கம் 20அடியளவிலும்,132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் கோவில் நீர்தேக்கம் 70அடி கொள்ளளவிலும்,72அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி நீர்த்தேக்கம் 40அடி கொள்ளவிலும் தண்ணீர் இருப்பு உள்ளது.குடிநீர் பற்றாக்குறைகள் ஏற்ப்பாட்டால் அதனை சமாளிக்க அணைகளில் தண்ணீர் இருப்பு வைக்கப் பட்டுள்ளதாக கூறப் படுகிறது. இந்த ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
TN Battles Worst Monsoon in 150 Years,the harvest festival of Pongal no cheer For Tamil Nadu Farmers. The once lush green fields have withered and wilted, turning a yellowish-brown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X