For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த 4 விதிகளை மீறினால் கட்டாயம் உங்கள் லைசென்ஸ் ரத்து.. தமிழக அரசு அதிரடி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல் துறை முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்மையில் உத்தரவிட்டது.

 Drunk and drive licences to be cancelled for traffic violations

இதையடுத்து தமிழக அரசு போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிகவேகத்தில் வாகனத்தில் செல்பவர்கள், போக்குவரத்து சிக்னலை மதிக்காதவர்கள், செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் லைசென்சை ரத்து செய்து 6 மாதங்களுக்கு அதனை முடக்கி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

English summary
state government has decided to cancel driving licences for violations of overspeeding, jumping traffic signals, drunk driving, using mobile phones in tn
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X