For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர தினத்தன்னைக்கு டாஸ்மாக்குக்கு பூட்டு... கள்ளத்தனமாக விற்றால் ஜெயிலு!!

Google Oneindia Tamil News

Dry day on August 15
நெல்லை: சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரதினத்தை கொண்டாட நாடு தயாராகிவருகிறது. தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உத்தரவின்படி தமிழகத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி மதுகடைகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் அரசு மதுபான கடைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபான கடைகள் அனைத்தும் ஆகஸ்ட் 15ம் தேதி மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நெல்லை கலெக்டர் கருணாகரன் கூறியிருப்பதாவது, ஆகஸ்ட் 15ம் தேதி மதுபான விற்பனை கடைகள் மூலம் மதுபானம் விற்க தடை செய்யப்பட்டுள்ளதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபான கடைகள் அனைத்திற்கும் விடுமுறையாகும்.

அன்று மதுபான விற்பனை, மதுபானத்தை கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

English summary
Tirunelvely Collector Karunakaran has in a press note issued here on Monday stated that all the TASMAC run liquor outlets would remain closed on August 15 (Wednesday) on account of Independence Day. The liquor shops and bars attached shall remain closed on this day and any attempts to open or sell liquor by TASMAC salesmen would be seriously viewed as per the law, the note added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X