For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திகு திகு திருவள்ளூர், அனலடிக்கும் நாமக்கல் - கொதிக்கும் வெயில்

அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் தமிழக மெங்கும் வெயில் சுட்டெரிக்கிறது. திருவள்ளூரில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. திருவள்ளூரில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நாமக்கல்லில் 106 டிகிரி சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. கரூர், நாமக்கல், சேலம், வேலூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில்தான் 105 டிகிரிக்கும் மேலாக வெயில் சுட்டெரிக்கிறது.

பகல் நேரங்களில் வீசும் அனல்காற்றினால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னையிலும் பிற மாவட்டங்களுக்கு நிகராக வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.

திகு திகு திருவள்ளூர்

திகு திகு திருவள்ளூர்

காலை முதலே பல நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது திருவள்ளூரில் அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் தகிக்கிறது, நாமக்கல்லில் 106 வெப்பம் பதிவானது. மதுரை, திருச்சி, தஞ்சையில் 102 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் வெப்பம் பதிவான கரூரில் இன்று 94 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையிலும் 95 டிகிரி வெப்பம் பதிவானது.

நாமக்கல் 106 டிகிரி

நாமக்கல் 106 டிகிரி

காலை முதலே பல நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது நாமக்கல்லில் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் தகிக்கிறது, மதுரை, திருச்சி, தஞ்சையில் 102 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் வெப்பம் பதிவான கரூரில் இன்று 94 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையிலும் 95 டிகிரி வெப்பம் பதிவானது.

பெண்கள் பாதிப்பு

பெண்கள் பாதிப்பு

வெயில் சுட்டெரிப்பதால் பெண்கள் அதிகமாக வெளியே தலைகாட்டத் தயங்கி வருகின்றனர். துப்பட்டாவினால் முகத்தையும், உடலையும் மூடியவாரே பயணிக்கின்றனர். சாலைகளில் பகல் 11 மணிக்கே குடைகளுடன் மக்கள் பலர் நடந்து செல்கின்றனர்.

தவிர்க்கும் மக்கள்

தவிர்க்கும் மக்கள்

வீடுகளில் பலரும் முடங்கினாலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மட்டுமே வெளியே பெரும்பாலும் வெளியே வருகின்றனர். தர்பூசணி, கிர்ணி பழம், இளநீர் கடைகளிலும், பழரச கடைகளிலும், மோர், கரும்புச்சாறு உள்ளிட்ட குளிர்பான கடைகளிலும் வியாபாரம் களைகட்டி வருகிறது.

வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்

வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்

மாநிலத்தின் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இடியுடன் மழை

இடியுடன் மழை

வெயில் கொளுத்தினாலும் வெப்பச்சலனத்தினால் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

English summary
Maximum temperature is likely to be above normaly 109 deg Celsius at a few places over interior Tamil Nadu.Rain or thundershower is likely to occur at isolated places over Interior Tamil Nadu and dry weather will prevail over coastal Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X