For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொட்டித் தீர்க்கும் மழை: சென்னையில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ள நீர் வடிந்த பிறகு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து காட்சியளிக்கிறது.

Due to heavy rain power supply gets stoped

ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீ்ர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இன்னும் வெள்ள நீர் வடியாததால் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுவதை தடுக்க சென்னையின் பல இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

மழையால் சென்னையில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள 18 இடங்கள்:

அண்ணாநகர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், தாம்பரம், அரும்பாக்கம், முகப்பேர், நொளம்பூர், பெரம்பூர், எம்.கே.பி. நகர், சேத்துப்பட்டு, தண்டையார்பேட்டை, கே.கே.நகர், மேடவாக்கம், சூளைமேடு, புளியந்தோப்பு, கொடுங்கையூர், மடிப்பாக்கம், ஆலந்தூர்.

வெள்ள நீர் வடிந்த பிறகு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

English summary
Due to heavy rain power supply gets stoped in chennai city
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X