For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் அன்னாசிப் பழ விளைச்சல் அமோகம்... கடும் விலை சரிவால் மக்கள் வாங்க ஆர்வம்!

கேரளாவில் அன்னாசி பழம் விளைச்சல் அதிதகரித்துள்ளதால் விலை கடுமையாக சரிந்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம் : கேரளாவில் அன்னாசிப் பழ விளைச்சல் அதிக அளவில் உள்ளதால் விலை கடுமையாக சரித்துள்ளதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் அன்னாசிப் பழம் கேரளாவில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. வியாபாரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப காயாகவும், பழமாகவும் பறித்து கொடுக்கப்படுகிறது. தற்போது கேரள மாநிலத்தில் அன்னாசிப் பழ சீசன் தொடங்கியுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் பழங்கள் தற்போது நெல்லை மாவட்டத்திற்கு வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர்.

Due to pineapple cultivation is more in Kerala rate reduced and the sales is high at Thirunelveli

இதனால் நெல்லை மாவட்டத்தில் கடைகளில் மட்டுமல்லாது லாரிகள் மற்றும் தெருவோர நடை பாதைகளிலும் மலைபோல் குவித்து வைத்து அன்னாசி பழம் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில், நாங்கள் நீண்ட காலமாக அன்னாசி பழம் விற்பனை செய்கிறோம். காயாக வாங்கி செயற்கையாக பழுக்க வைப்பது கிடையாது.

கேரளாவில் பத்தினம்திட்டா, முன்னகாயம், எரிமேலி, பத்மநாபபுரம் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக வாங்கி விற்பனை செய்து வருகிறோம். தற்போது தரமான அன்னாசி பழம் கிலோ ரூ.20 என மார்க்கெட்டில் உள்ளது. பழத்தின் எடைக்கு ஏற்ப முக்கால் கிலோ முதல் ஓன்றரை கிலோ இருக்க வாய்ப்பு உள்ளது.

இந்த பழத்தை வாங்கும் போது பழத்தை இயற்கையாக பழுக்க வைத்தது தான் என பழத்தின் கீழ்பகுதியை பார்த்தால் தெரியும். கீழ்பகுதி காய்திருக்காமல் பறித்த நிலையே இருந்தால் இயற்கையான பழமாகும். எங்களது பழம் ஒரு வாரம் வரை கெடாமல் தாக்கு பிடிக்கும் என அவர்கள் கூறுகின்றனர். தற்போது விலை சரிவால் பொதுமக்கள் அன்னாசி பழம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

English summary
Due to pineapple cultivation is more in Kerala, rate reducced low. From Kerala pineapple is transported to Thirunelveli so the sales in the state is high right now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X