For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்!

வாய் பேச முடியாத திருமண ஜோடி போலீசில் தஞ்சமடைந்தார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்!

    நெல்லை: சூப்பர்ல.. வாய் பேச முடியாவிட்டாலும் இந்த ஜோடி செய்த காரியம் எல்லாரையுமே பேச வைத்துவிட்டது.

    நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் சேவியர் செல்வம். இவருக்கும் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த வைஷ்ணவி என்பவருக்கும் கடந்த 2 மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் நிச்சயம் ஆனது.

    ஊர் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்துதான் இதனை ஏற்பாடு செய்தார்கள். இவர்கள் இருவருமே வாய் பேச முடியாதவர்கள் என்று கூறப்படுகிறது.

    பிடித்து விட்டது

    பிடித்து விட்டது

    ஆனால் பொண்ணும், மாப்பிள்ளையும் வேற வேற சாதியாம். இதை கேள்விப்பட்டு ரெண்டு வீட்டு சொந்தக்காரங்களும் இதற்கு எதிர்ப்பு சொன்னார்கள். இதனால் நிச்சயம் ஆன கல்யாணம் நின்றே போய்விட்டது. ஆனால் பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடித்துவிட்டது, மாப்பிள்ளைக்கும் பொண்ணை பிடித்து விட்டது.

    உறவினர்கள்

    உறவினர்கள்

    பெண் பார்க்க போன அன்றே இருவருக்கும் பிடித்துபோன சமாச்சாரத்தை மல்லுக் கட்டும் சொந்தக்காரர்களிடம் சொல்லவில்லை. அதனால் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள். சொந்தக்கார்களிடம் சொன்னால் ஒன்னுக்கும் வேலைக்கு ஆகாது என்று நினைத்த இந்த ஜோடி, நெல்லையில் உள்ள தூரத்து உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார்கள்.

    பெண்ணை காணோம்

    பெண்ணை காணோம்

    இதனையடுத்து நண்பர்கள் முன்னிலையில் கல்யாணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணத்தை பாதிரியார் சேகர் நடத்தி வைத்திருக்கிறார். பிறகு கல்யாணம் முடிந்த கையோடு ரிஜிஸ்டரும் செய்து விட்டார்கள். இப்போதுதான் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது. பெண்ணை காணோம் என்று போலீசில் புகார் சொன்னார்கள். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கை விசாரிக்க ஆரம்பித்தனர்.

    சமாதான பேச்சு

    சமாதான பேச்சு

    அப்போது, மாப்பிள்ளை சேவியர் செல்வம் வீட்டுக்கு போலீசார் தகவலை சொல்லி ஸ்டேஷன் வர சொன்னார்கள். அப்போதுதான் மாப்பிள்ளையும், பெண்ணும் போலீஸ் ஸ்டேஷனில் மாலையும் கழுத்துமாக வந்து இறங்கினார்கள். தங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது, அதனை ரிஜிஸ்டரும் பண்ணி விட்டோம் என்று சொல்லி அந்த ஆவணத்தையும் போலீசில் காட்டினார்கள். இதையடுத்து போலீசார் இரு வீட்டு ஆட்களிடம் பேசி சமாதானப்படுத்தினார்.

    பேச முடியவில்லை

    பேச முடியவில்லை

    இப்படி இருவரும் தம்பதியாக வந்து நின்றதை பார்த்ததும் இரு வீட்டு ஆட்களுமே ஷாக் ஆகித்தான் போனார்கள். பிறகு என்ன செய்ய முடியும்? ஒருத்தரை ஒருத்தர் விரும்பிதான் இந்த முடிவை எடுத்திருக்காங்க... தாலியும் கட்டியாச்சு, ரிஜிஸ்டரும் முறைப்படி பண்ணியாச்சு... நின்று கொண்டிருக்கும் இடமோ போலீஸ் ஸ்டேஷன்... ஒருத்தரும் வாயை திறக்க முடியவில்லை. பேச முடியாமல் தடுமாறி நின்றது இவர்கள்தான்... கடைசியில எல்லாரும் சேர்ந்து ஆசீர்வாதம்தான் பண்ண முடிந்தது... இன்ஸ்பெக்டர் உட்பட!!

    English summary
    In Puliyangulam police station Dum couple asylum near Nellai District
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X