For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3-ஆவது அணியில் திமுக இடம்பெறாது... காங்கிரஸ் வயிற்றில் பாலை வார்த்தது துரைமுருகனின் சூசக அறிவிப்பு

3-ஆவது அணியில் திமுக இடம்பெறாது என்று துரைமுருகன் அறிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    3-ஆவது அணியில் திமுக இடம்பெறாது- துரைமுருகன்- வீடியோ

    சென்னை: 3-ஆவது அணியில் திமுக இடம்பெறாது என்று துரைமுருகன் சூசகமாக அறிவித்தார்.

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறார். இதற்காக அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அணுகினார். அவர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து 3-ஆவது அணிக்கு வருமாறு திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். தெலுங்கானா முதல்வரும் கடந்த மாதம் நேரடியாக வந்து கருணாநிதி மற்றும் ஸ்டாலினை சந்தித்து 3-ஆவது அணிக்கு ஆதரவு கோரினார்.

    தோல்வி

    தோல்வி

    இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கு வயிற்றில் புளி கரைத்தது. இந்த கூட்டணி முறியுமோ என்ற கேள்வியும் எழுந்தது. கடந்த 2011-ஆம் சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் பெரும் தோல்வி அடைந்தது. திமுக- காங் கூட்டணி 3-ஆவது இடத்துக்கு சென்றது. தேமுதிக எதிர்க்கட்சியானது.

    3-ஆவது அணிக்கு...

    3-ஆவது அணிக்கு...

    இந்நிலையில் அடுத்து 2016-ஆம் ஆண்டாவது திமுக -காங் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கடுமையாக போராடியது. ஆனால் அதிமுக ஆட்சியே மீண்டும் வந்தது. இதை மனதில் வைத்துக் கொண்டு ஸ்டாலின் 3-ஆவது அணிக்கு இடம்பெயரலாம் என்று கூறப்பட்டது.

    சூசகம்

    சூசகம்

    இதைத் தொடர்ந்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 3-ஆவது அணியில் திமுக இடம்பெறாது. காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்தே திமுக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    ஸ்டாலினுக்கு நான் ஆலோசனைகளை சொல்வதாக கூறுவது வதந்தி. கட்சி சார்பில் நான் எந்த முடிவு எடுத்தாலும் அதை ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டுதான் எடுப்பேன் என்றார். 3ஆவது அணி குறித்து துரைமுருகனின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

    English summary
    DMK's Senior leader Duraimurugan clues that his party wouldnot involve in 3rd front. They will face the Loksabha election with Congress alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X