• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கத்தரிக்காய் காரக்குழம்பு சாப்பிட்டு இருப்பீங்க... காண்டம் பாத்திருக்கீங்களா?

By Mayura Akilan
|

சென்னை: ஜிகா வைரஸ் தாக்குதல் செக்ஸ் பிரியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தேவையற்ற கர்பத்தையும், பல செக்ஸ் நோய் தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள கண்டுபிடிக்கப்பட்ட காண்டம். ஜிகா வைரஸ் தொற்றில் இருந்தும் உங்களை காக்கிறது என்று விளம்பரம் செய்கின்றன.

காண்டம் தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பல ப்ளேவர் மணம் வீசும் காண்டம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மலர்களின் மணம் வீசும் காண்டம் தயாரித்த நிறுவனம் தற்போது கத்தரிக்காய் மணத்தில் காண்டம் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது.

கத்தரிக்காய் என்றொரு காய்கறி இருப்பதே, நம்மில் பலருக்குத் தெரியாது. அதாவது, அப்படியொரு வஸ்து இருப்பதைத் தெரிந்தது போலக் காட்டிக்கொள்வதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்றவற்றை ரசிக்கும் மக்கள், ஏனோ கத்தரிக்காயை ரசிப்பதில்லை. அதனை ருசிப்பதில்லை.

கத்தரிக்காய் டிரெண்ட்

கத்தரிக்காய் விலை குறைவாக இருப்பதால் பலர் அதை வாங்கி காரக்குழம்பு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வார்கள். சிலர் சாம்பாரில் போடுவார்கள். உணவில் பெரும்பாலோனோர் ஒதுக்கும் கத்தரிக்காயை ட்ரெண்டிங்கில் இடம்பெற வைத்த புண்ணியத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது டியூரக்ஸ் நிறுவனம்.

பழங்கனின் ப்ளேவர் காண்டம்

பழங்கனின் ப்ளேவர் காண்டம்

காண்டம் தயாரிப்பில் பெரும்பெயர் பெற்ற டியூரக்ஸ் நிறுவனம், ஏற்கனவே சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், வாழைப்பழம் என்று விதவிதமான நறுமணங்களைத் தாங்கிய தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. அந்த மாதிரி விஷயங்களைத் தேடித்தேடிச் சேகரிப்பவர்களுக்காகவே, ரூம் போட்டு யோசிப்பது இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களின் வழக்கம்.

கத்தரிக்காய் மணம்

கத்தரிக்காய் மணம்

தற்போது இந்த நிறுவனம் கத்திரிக்காய் மணம் வீசும் காண்டம் ஒரு புதிய காண்டம் அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக அந்தரங்க விஷயம் என்றாலே அடக்கி வாசிக்கும் சமூக வளைதளவாசிகள், இந்த கத்திரிக்காய் மணம் வீசும் காண்டம் விஷயத்தில் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க, இந்த மணத்தில் யாராச்சும் காண்டம் வாங்குவாங்கலா என டுவிட்டரில் கலாய்த்து வருகின்றனர். இதனால் இந்த காண்டம் விளம்பரம் டுவிட்டரில் டிரெண்டிங்காகவே ஆகிவிட்டது.

டுவிட்டரில் கொதிப்பு

டுவிட்டரில் கொதிப்பு

இரண்டு நாட்களுக்கு முன்பு, கத்தரிக்காய் மணத்துடன் புதிய தயாரிப்பு வெளியாவதாக அறிவித்தது டியூரக்ஸ். இந்த தகவல் வந்ததுமே, நெட்டிசன்கள் கொதித்துவிட்டார்கள். ‘கத்தரிக்காயா?, இதெல்லாம் ஒரு ஐடியாவா? என்று கேட்கும் சிலர், மூளை மழுங்கிவிட்டதா, சீக்கிரமே நீங்க ஊத்தி மூடிற வேண்டியதுதான்! என்கின்றனர். கத்தரிக்காயை கண்டம் பண்ணிட்டானுங்களே என்பது போன்ற கமெண்ட்கள் சிதற ஆரம்பித்துவிட்டன. அதில் பல அச்சில் ஏற்றமுடியாத ரகம்.

பச்சமிளகாய் ப்ளேவர் போடுங்க

கத்தரிக்காய் ஃப்ளேவர் காண்டமாம்..... அப்டியே பச்சமொளகா ஃப்ளேவர்லயும் ஒண்ணு ரிலீஸ் பண்ணிடுங்கடா.... பங்சன் சிறப்பா முடிஞ்சிடும்....//

உடனே, சுதாரித்துக் கொண்ட டியூரக்ஸ், ட்விட்டரில் அடுத்த அறிவிப்பை வெளியிட்டது. அது, 'செக்ஸ்டிங்'கில் விளையாடும் இளைய தலைமுறையைக் குறிவைத்து இருந்தது. 'பாதுகாப்பான உறவு மட்டுமல்ல, 'அந்த' மாதிரியான பேச்சும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.

rn

செல்பேசி மொழி

இளைஞர்களின் செல்பேசி மொழியான எமோடிகானில், கத்தரிக்காயை இடம்பெற வைக்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். மற்றபடி, நாங்கள் புதிய தயாரிப்பு எதுவும் வெளியிடப்போவதில்லை' என்று நீண்டது அந்த அறிவிப்பு. கத்தரிக்காயை வைத்து கூட்டு செய்யலாம், பொரியல் பண்ணலாம் என்றிருக்கும் நம்மூர்காரர்களுக்கு, இந்த விஷயம் நிச்சயம் எரிச்சலைத்தான் தரும். ‘அதைச் சொல்றதுக்கு வேற வழியே இல்லையா என்ன' என்று சிலர் கதறினாலும், ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துவிட்டது கத்தரிக்காய். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும், குரல்கள் எழுந்துள்ளன.

முருங்கைக்காய் சாம்பார் காண்டம்

கத்தரிக்காய் காண்டம் வந்திருச்சு... இனி முருங்கைக்காய் சாம்பார் வாசனையுள்ள காண்டம் எப்போது வரும் என்றும் என்று கேட்டு வருகின்றனர்.

முந்தானை முடிச்சு படத்தில் டைரக்டர் பாக்யராஜ் முருங்கைக்கு ஒரு வாழ்வு கொடுத்த மாதிரி, இப்போ கத்தரிக்காயைக் கையில எடுத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். எப்படியோ இப்படியாவது கத்தரிக்காய் புரட்சி ஏற்பட்டதே என்று விவசாயிகள் சந்தோசப்பட்டால் சரிதான்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
An Angry Durex Punishes the World With Eggplant-Flavored Condoms In retaliation for no condom emoji By Gabriel Beltrone.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more