For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரேசன் கடைகளில் மார்ச் 31க்கு மேல் மின்னணு பண பரிவர்த்தனை- மத்திய அரசு

நாடு முழுவதும் மார்ச் மாதத்திற்குள் ரேஷன் கடைகளில் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ரேஷன் கடைகளில் மார்ச் மாதத்துக்குள் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் மாதத்திற்குள் ரேஷன் கடைகளில் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்தார். ஒரு மாதமாகியும் வங்கிகளில் பண தட்டுப்பாடு தீரவில்லை. பண தட்டுப்பாடு மட்டுமல்லாது சில்லரை தட்டுப்பாடும் உருவாகியுள்ளதால் தினமும் வங்கிகளில் திருவிழா போல் கூட்டம் கூடி விடுகிறது.

E Payment all ration shops by March 2017: Ram Vilas Paswan

மக்கள் அனைவரையும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு மாற மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதற்கு முன்னதாக அரசு நிர்வாகத்தையும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேசன் கடைகளில் குறைந்த பட்சம் 100 முதல் 200 ரூபாய் வரை மட்டுமே பொருட்கள் வாங்கப்படுகின்றன. பணத்தட்டுப்பாடு வந்த பின்னர் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் மார்ச் மாதத்துக்குள் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 5.27 லட்சம் ரேஷன் கடைகளில் இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் எனவும் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார். இந்த புதிய திட்டத்தால் ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளில் கரண்ட் இல்லா விட்டால் மிசின் வேலை செய்யாது என்று மூடி விடுகின்றனர். மின் தட்டுப்பாடு உள்ள தமிழகத்தில் ரேசன் கடைகளில் மின்னணு பரிவர்த்தனை எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

English summary
Government aims to E Payment at all fair price shops across the country by March 2017 said central minister Ram Vilas Paswan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X