For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொ.ம.தே.க.வுக்கு "தொப்பி" போட்ட தேர்தல் ஆணையம்!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து 6 இடங்களில் போட்டியிட்டது. அதன் பிறகு நடந்த மக்களவை தேர்தலில் ஈஸ்வரன் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தது.

EC allots cap symbol for KMDK

வரும் மே மாதம் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் கொங்குநாடு மகக்ள் தேசிய கட்சி திமுக அல்லது மக்கள் நலக் கூட்டணியோடு சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அறிவிப்பு வெளியிட்டார்.

EC allots cap symbol for KMDK

அந்த கட்சி 72 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 2 கட்டமாக 51 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 21 வேட்பாளர்களும், 2வது கட்டமாக 30 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2 நாட்களில் மீதமுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் ஈஸ்வரன் தலைமையிலான கட்சிக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

English summary
Election commission has allotted cap symbol for KMDK ahead of the assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X