For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக பெயர், கொடி, இரட்டை இலை சின்னம் முடக்கம்... தேர்தல் ஆணைய உத்தரவு சொல்வது இதுதான்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் இரட்டை இலையை மட்டுமின்றி அக்கட்சியின் பெயர் கொடியையும் முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது இடைக்கால உத்தரவு எனவும் தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EC freezes ADMK Symbol and Party

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் புதன்கிழமை நள்ளிரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதன் சாரம்சம்:

  • ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக பெயரையோ, சின்னத்தையோ, கொடியையோ சசிகலா, ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த கூடாது.
  • அதிமுகவின் அதிகாரப்பூர்வமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருப்பது இடைக்கால உத்தரவு.
  • ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் இருதரப்பும் வியாழக்கிழமையன்று காலை 10 மணிக்குள் புதிய கட்சி பெயர், சின்னத்தை தேர்வு செய்ய அணுகலாம்.
  • தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
  • இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள், பிரமாண பத்திரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஏப்ரல் 17-ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம்.
  • அதிமுக என்ற பெயரை புதிய கட்சியின் பெயருக்கு முன்னரோ பின்னரோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • 20,000 பக்க ஆவணங்களை குறைவான தருணத்தில் படித்து பார்த்து உடனே முடிவெடுக்க முடியாததால் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது.
English summary
The Election Commission freezed not only ADMK's Two Leaves Symbol also party name and flag.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X