For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரைவில் சசிகலாவை தேர்தல் ஆணையமே தூக்கி எறியும்.. ஓ.பி.எஸ். அதிரடி

விரைவில் சசிகலா நியமனம் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செல்லாது என்று விரைவில் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

அதிமுகவின் விதிப்படி, அக்கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர். இதற்கு கடந்த மாதம் 28-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்நிலையில் கெடு முடிந்த நாளன்று பெங்களூரில் சசிகலாவுடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். தேர்தல் ஆணையத்திற்கு உரிய விளக்கத்தை சசிகலா அளிக்காமல், சசிகலாவால் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளித்திருந்தார்.

 தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பு

தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பு

இந்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துள்ளது. அதிமுகவின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத டிடிவி தினகரன் அளிக்கும் விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் வரும் 10-ஆம் தேதிக்குள் சசிகலாவே பதில் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 சசிகலாதான் பதிலளிக்க வேண்டும்

சசிகலாதான் பதிலளிக்க வேண்டும்

மேலும், சசிகலாவிற்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசிற்கு சசிகலாதான் பதில் அளிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சசிகலா அங்கீகரிக்கும் நபரின் கையெழுத்துடன் பதில் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 ஓபிஎஸ் வரவேற்பு

ஓபிஎஸ் வரவேற்பு

தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி முடிவை ஓ.பன்னீர் செல்வம் வரவேற்றுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: அதிமுகவின் சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளர் என்பது அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் நடத்தி மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே அதிமுகவில் கிடையாது.

 செல்லாது என்று அறிவிக்கப்படும்

செல்லாது என்று அறிவிக்கப்படும்

பொதுச் செயலாளர் நியமனம் செய்யப்படும் வரை கட்சிப் பணிகளை அவைத் தலைவரும், பொருளாளரும் மட்டுமே கவனித்துக் கொள்ள வேண்டும். சசிகலாவின் நியமனம் குறித்து தேர்தல் ஆணையத்தின் அதிரடி முடிவு வரவேற்புக்குரியது. இது சசிகலாவின் நியமனம் செல்லாது என்று அறிவிப்பதற்கான அச்சாரமே ஆகும். இந்த இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

English summary
The Election Commission will cancel the Sasikala's appointment as ADMK General Secretary soon, says O.Panneer selvam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X