For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுபிக்‌ஷா நிறுவன உரிமையாளரின் ரூ.4.50 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சுபிக்‌ஷா பல்பொருள் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு சொந்தமாக, மரக்காணம் மற்றும் நீலாங்கரையில் உள்ள சொத்துகளை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

சுபிக்‌ஷா என்ற பெயரில் 1600க்கும் மேற்பட்ட பல்பொருள் வர்த்தக நிறுவனம் நடத்திவரும் சுப்ரமணியன், பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு, ரூ.77 கோடி கடன்தொகையை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

ED attaches Subhiksha MD’s properties worth Rs 4.5 crore

இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததிருந்த நிலையில் அமலாக்கத்துறை இயக்குனரகமும், சுப்ரமணியன் மீது வழக்குப் பதிவு செய்தது.

இதுதொடர்பான விசாரணையில், சுப்ரமணியன் பரோடா வங்கிக்குச் செலுத்தவேண்டிய கடன்தொகையை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, சொத்துகள் வாங்கியதாக, தெரியவந்தது. இதையடுத்து, அவர் வாங்கிய விவசாய நிலம் மற்றும் காலிமனைகளை அமலாக்கத்துறையினர் ஏற்கனவே பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், தற்போது மரக்காணம் மற்றும் சென்னை நீலாங்கரையில் சுப்ரமணியன் பெயரில், வாங்கப்பட்ட வீடுகளையும் அமலாக்கத்துறை கையகப்படுத்தி உள்ளது. இதன் மதிப்பு ரூ.4.50 கோடி மதிப்பு கொண்டது என்று கூறப்படுகிறது. இது சுபிக்‌ஷா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Officials of the Directorate of Enforcement, Chennai, attached Rs 4.50 crore worth property, belonging to R Subramanian, promoter and managing director of now defunct Subiksha chain of retail shops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X