For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேகர் ரெட்டி லிங்க்: ராமமோகன் ராவ் மீதும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குகள் பாயும்?

தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ் மீதும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான சேகர் ரெட்டி மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குகள் பாய்ந்துள்ளன. அதைப் போலவே தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ் மீதும் வழக்குகள் பாயக் கூடும் என கூறப்படுகிறது.

அரசு கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் முதலில் சோதனை நடத்தினர். இச்சோதனையில் ரூ171 கோடி ரொக்கம், 131 கிலோ தங்க கட்டிகள் சிக்கின.

ED, CBI to file cases against Ram Mohan Rao?

இதையடுத்து சேகர் ரெட்டியிடம் அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேகர் ரெட்டி வீட்டில் கிடைத்த ஆவணங்கள், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சோதனையில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்டமாக அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகள் ராமமோகன் ராவ் மீதும் வழக்குகள் பதிவு செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

English summary
Sources said that The Enforcement Directorate and CBI will file cases against Tamilnadu Chief Secretary Ram Mohan Rao for the links with Sekhar Reddy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X