For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜிஎன் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் ரூ. 115 கோடி சொத்து முடக்கம்... அமலாக்கத்துறை அதிரடி!

சென்னையில் விஜிஎன் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ரூ.11,000 கோடி மெகா மோசடியில் ஈடுபட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி

    சென்னை : சென்னை கிண்டியில் உள்ள விஜஎன் டெவலப்பர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான புகாரை அடுத்து இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    பஞ்சாப் நேஷனல் வங்கியை மோசடி செய்து ரூ. 11, ஆயிரம் கோடி கடன் பெற்று விட்டு வைர வியாபாரி நீரவ் மோடி வெளிநாடு தப்பியோடியது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி ஊழியர்கள் உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நீரவ் மோடியின் வீடு மற்றும் அவரது நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்களிடம் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

    ED freezes Rs.115 crores of VGN develpers property at Chennai

    இந்நிலையில் சென்னையில் எஸ்பிஐ வங்கியை மோசடி செய்ததாக விஜிஎன் டெவலப்பர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது அமலாக்கத்துறையின் நடவடிக்கை பாய்ந்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கி விட்டு மோடி செய்ததாக அமலாக்கத்துறை விஜிஎன் டெவலப்பர்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

    மேலும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும் இந்த நிறுவனத்தின் மீது வழக்கு உள்ளது. இதனால் சென்னை கிண்டியில் அந்த நிறுவனத்தின் ரூ. 115 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. விஜிஎன் டெவலப்பர்ஸ் நிறுவனம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.

    English summary
    Enforecement Directorate freezed VGN developers assets worth RS. 115 crores at Chennai for defrauding SBI bank by getting loan and ed files a case and taken action against them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X