For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வு, வர்தா புயல் நிவாரணம், ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி மோடியிடம் கோரிக்கை வைத்த எடப்பாடி

வர்தா புயல் நிவாரணம், நீட் தேர்வு விலக்கு, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். வர்தா புயல் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் பிரதமர் மோடியிடம் வைத்தார்.

 Edapadi Palanisami arrived in chennai

அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் மத்திய நகர்ப்புறவளர்ச்சித்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவை அவரது அமைச்சகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் நகரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். இலங்கை சிறையிலுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தினேன். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தினேன். வறட்சி நிவாரணம், வர்தா புயல் நிவாரண நிதி வழங்குமாறு கோரியுள்ளேன். ஜல்லிக்கட்டுக்கு உதவிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தேன்.

மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கோரிக்கை விடுத்தேன். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன்.

காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தினேன். தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தாம்பரம்-செங்கல்பட்டு சாலையை விரிவாக்க கோரிக்கை வைக்கப்பட்டது. கூடங்குளத்தில் 3வது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Chief Minister Edapadi Palanisami demanded PM Modi to exempt NEET exam from Tamil Nadu and other demands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X