For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதிர்கட்சியினர் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்த ஜெயக்குமார்

எதிர்கட்சியினர் அமளிக்கிடையே நிதியமைச்சர் ஜெயக்குமார் முதல் பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று கூடியது. எடப்பாடி பழனிசாமி அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் எதிர்கட்சியினரின் அமளிக்கிடையே தாக்கல் செய்தார்.

உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் வரிகள் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகள் இன்று அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். புதிய அரசு பொறுப்பேற்றதும் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்தன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் தாக்கல்

குடிநீர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, மாணவர் மரணம், ஹைட்ரோகார்பன் பிரச்சினை என தமிழகத்தில் தினசரியும் போராட்டங்கள் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 2017-18-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், காலை 10.30 மணிக்கு பேரவையில் தாக்கல் செய்தார்.

தேர்தல் வாக்குறுதிகள்

தேர்தல் வாக்குறுதிகள்

கடந்த 2016 சட்டசபைத் தேர்தலின்போது, துறைகள் வாரியாக பல்வேறு வாக்குறுதிகளை ஜெயலலிதா அளித்தார். தேர்தல் முடிந்து முதல்வராக பொறுப்பேற்றதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடல், மின் நுகர்வோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, பல்வேறு புதிய திட்டங்களையும் சட்டசபையில் 110-வது விதியி்ன் கீழ் அறிவித்து வந்தார். அவற்றுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதும் மேலும் 500 டாஸ்மாக் மதுக் கடைகள் மூடல், மகளிருக்கு ரூ.20 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டர் உள்ளிட்ட திட்டங்களை அறிவித் தார். இவற்றுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

புதிய திட்டங்கள்

புதிய திட்டங்கள்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களை கருத்தில்கொண்டு புதிய திட்டங்கள், அறிவிப்புகளை பட்ஜெட்டில் அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, இலவச செல்போன் திட்டமும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

புதிய திட்டங்கள்

புதிய திட்டங்கள்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களை கருத்தில்கொண்டு புதிய திட்டங்கள், அறிவிப்புகளை பட்ஜெட்டில் அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, இலவச செல்போன் திட்டமும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடன்சுமை

கடன்சுமை

கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், பற்றாக்குறை பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதன்பின், மாநில அரசுக்கு வரவேண்டிய மத்திய அரசின் நிதிப்பகிர்வு, நிதி ஆணையத்தின் நிதி, வார்தா புயல் மற்றும் வறட்சி நிவாரண நிதி ஆகியவை மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு இன்னும் வரவில்லை. டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டது. பத்திரப்பதிவு வருவாய் குறைந்தது, பண மதிப்பு நீக்க நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால் தமிழக அரசின் வருவாயும் குறைந்துள்ளது.

நிதிச்சுமை

நிதிச்சுமை

இதை சமாளிக்கவே சமீபத்தில் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியது. இதேபோல, நிதிச் சுமையை சமாளிக்க சில வரி உயர்வுகள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய வரிகளை அறிவிப்பாரா? அல்லது வரிகளற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்வாரா என்று வணிகர்கள் ஒரு பக்கம் எதிர்பார்த்திருக்க, புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்பது சாமான்ய மக்கள் எதிர்பார்த்தனர்.

அமளிக்கிடையே தாக்கல்

அமளிக்கிடையே தாக்கல்

நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த போது டிடிவி தினகரன், சசிகலா பெயரை சட்டசபையில் கூறினார். இதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அமளிக்கிடையே பட்ஜெட்டை வாசித்தார் ஜெயக்குமார்.

English summary
Finance Minister D Jayakumar will be presenting his first budget in the TN Assembly on today. The budget for 2017-18 is likely to be a tax-free, please-all and one with many new welfare schemes for farmers, fishermen and other sections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X