For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி திமுக.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

Google Oneindia Tamil News

வேடசந்தூர்: கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி திமுக என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆங்காங்கே பொதுக் கூட்டங்களில் பேசி வருகின்றனர். பிரசாரங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.

நாடாளுமன்ற கரூர் மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் வேடசந்தூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் பேசினார்.

குஷ்பு.. இளமை.. தொட்டால் சிவக்கும் அழகு.. செல்லூர் ராஜு.. எலக்ஷன் மேட்டரு.. பீல் ஆயிட்டாப்ள!குஷ்பு.. இளமை.. தொட்டால் சிவக்கும் அழகு.. செல்லூர் ராஜு.. எலக்ஷன் மேட்டரு.. பீல் ஆயிட்டாப்ள!

ஊழல் கட்சி திமுக

ஊழல் கட்சி திமுக

அவர் பேசுகையில் திமுகவினர் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றுவதற்காக அளிக்கப்பட்ட பொய் அறிக்கையாகும். கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி திமுக. மத்தியில் கூட்டணியில் இருந்தும் தமிழகத்திற்கு எந்த வித நன்மையையும் செய்யவில்லை.

பெண்கள் பாதுகாப்பு

பெண்கள் பாதுகாப்பு

திமுக ஏழைகளுக்கு கொடுப்பவற்றை தடுக்கும் கட்சி. திமுக ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் கட்சி. திமுக நிர்வாகிகள் ஒழுங்காக இருந்து விட்டால் பெண்கள் பாதுகாப்பாக இருப்பர்.

துரும்பை கூட

துரும்பை கூட

விவசாயிகளுக்காக 23 நாட்கள் நாடாளுமன்றத்தையே அதிமுக எம்பிக்கள் முடக்கினர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.

நாட்டு மக்களை பற்றி அல்ல

நாட்டு மக்களை பற்றி அல்ல

தேர்தல் வரும்போது தான் காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு தமிழக மக்கள் குறித்து ஞாபகம் வருகிறது. திமுகவுக்கு வீட்டு மக்களை பற்றியே கவலை என கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.

English summary
Edappadi Palanisamy says in Vedachandur election campaign that DMK will do corruption in air too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X