• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எடப்பாடி கோபம்.. கைது செய்ய ரெடியான காவல்துறை.. டிடிவி தினகரன் திடீர் டூரின் பரபர பின்னணி

By Raj
|

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து, அதிமுக கட்சி அலுவலகம் வருவதை தவிர்த்துள்ளார் டிடிவி தினகரன்.

ஆக31 வரை லாக்டவுன் நீட்டிப்பு- கட்டுப்பாடுகள், தளர்வுகள் எவை? முதல்வரின் விரிவான அறிவிப்பு

கெடு முடிந்ததும் ஆகஸ்ட் 5 ந்தேதி தலைமைக்கழகம் வந்து கட்சி பணிகளை துவங்குவதாக திட்டமிட்டிருந்தார் திவாகரன். தலைமைக்கழகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு அங்கிருந்தபடியே டூர் கிளம்புவதுதான் தினகரன் வகுத்திருந்த திட்டம்.

ஆனால், தற்போது 14ந்தேதி்யிலிருந்து கிளம்புவதாக அறிவித்துள்ளார். அப்படிச்செல்லும் போது வரவேற்க ஆள் வேணுமே என்பதற்காக பொறுப்பாளர்களையும் நியமித்திருக்கிறார்.

எடப்பாடி கோபம்

எடப்பாடி கோபம்

இந்த நியமனத்துக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க, எடப்பாடியின் கோபம் அதிகரித்து, அது திவாகரன் வழியாக எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறார் தினகரன். கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக காட்டுவதற்காக தலைமைக்கழகம் வந்து அங்கிருந்து டூர் கிளம்புவதாக தினகரன் வகுத்திருந்த திட்டத்தை அறிந்த எடப்பாடி, அமைச்சர்களுடன் விவாதித்தார்.

சமூக விரோதிகள்

சமூக விரோதிகள்

தினகரன் கட்சி அலுவலகம் வருவதையோ அதிமுக நிர்வாகிகளை சந்திப்பதையோ அனுமதிக்க கூடாது. அப்படி ஒருமுறை அனுமதித்தால் கட்சிக்குள் குழப்பம் வரும். நிர்வாகிகள் என் கிற பேரில்சமூகவிரோதிகளையும் அழைத்து வர தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்சிலரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் குண்டர்கள் நுழைவதை எப்படி ஜீரணிக்க முடிதும்? அதனால் தயவுதாட்சண்யமின்றி தினகரனை கைது செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை

எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை

தினகரனுடன் எம்.எல்.ஏ.க்கள் வந்தாலும் கைது செய்ய வேண்டும். வேண்டுமானால் எம்.எல்.ஏ.க்களிடம் மட்டும் கைது செய்ய உள்ள திட்டத்தை முன்கூட்டியே சொல்லிவிடலாம். அதன்பிறகு தினகரனுடன் வருவதும் வராததும் அவர்கள் பாடு. மேலும், திவாகரனிடம் மீன்டும் ஒருமுறை சொல்லிவிடுங்கள் என்று எடப்பாடிக்கு அமைச்சர்கள் சொல்லியுள்ளனர்.

டிஜிபிக்கு அறிவுரை

டிஜிபிக்கு அறிவுரை

இந்த முடிவை எடப்பாடி எடுத்த நிலையில், டி.ஜி.பி.யிடமும் சென்னை போலீஸ் கமிஷனருக்கும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தளவாய்சுந்தரத்தை அனுப்பி சமரசம் செய்ய முயற்சித்தார் தினகரன். தன்னை சந்தித்த தளவாயிடம், கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து சட்டஒழுங்கு பிரச்சனையை உருவாக்க திட்டமிடுகிறார் தினகரன். இதனை அனுமதிக்க முடியாது. அவரிடம் இதனை தவிர்க்கச் சொல்லுங்கள். ஓ.பி.எஸ். மாதிரி நான் இல்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்த எல்லை வரையிலும் போவேன். அவர் கைது செய்யப்பட்டால் ரிமாண்ட் செய்யபபடுவார் . அதனால் அவருக்கு அட்வைஸ் செய்யுங்கள் என கோபமாக சொல்லியிருக்கிறார் எடப்பாடி. வேறு எதுவும் பேசாமல் திரும்பிவிட்டார் தளவாய் சுந்தரம்.

தளவாய் சுந்தரம் தூது

தளவாய் சுந்தரம் தூது

இந்த நிலையில், அமைச்சர்களின் யோசனைபடி. திவாகரனிடம் பேசிய எடப்பாடி, தளவாயிடம் சொன்ன அதே தகவல்களை திவாகரனிடமும் சுட்டிக்காட்டியதுடன் இநத விசயத்தில் நான் கடுமையாகத்தான் இருப்பேன் என கடுமைக்காட்டியிருக்கிறார். இதனையடுத்தே, தினகரனை எச்சரித்ததுமில்லாமல், தலைமைக்கழகம் போவதை கைவிடு. நேரம் வரும்போது அங்கு செல்வதை யோசிக்கலாம். எடப்பாடியும் அவரது அமைச்சர்களும் உனக்கு எதிராக சீரியஸ் காட்டுகிறார்கள் . மீன்டும் ஒருமுறை நீ ஜெயிலுக்கு போனால் பலகீனமாகிவிடுவாய். சாதகமான சூழல் வருவதற்காக காத்திருப்பது தவறில்லை என அட்வைஸ் செய்துள்ளார்.

கைதுக்கு பயம்

கைதுக்கு பயம்

இதனை ஏற்ற தினகரன், உறவுகளிடம் கலந்தாலோசித்தபோது அவர்களும் கைதுக்கு பயப்படுவதை உணர்ந்துகொண்டார் தினகரன். அவருக்கும் ஜெயிலுக்குள் செல்ல பயம். அதனால் டூர் ப்ரோக்கிராமை அறிவித்தார். இந்த ப்ரோகிரமை அவர் போடாமல் இருந்தால், அவர் கெடு வி்தித்தற்கும் , ஆகஸ்ட் 5 க்கு பிரகு எனது அரசியலை பார்ப்பீர்கள் என்றுசொல்லியிருந்ததற்கும் பொருள் இல்லாமல் போகும். அது அவரது அரசியலுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால்தான் அவசரமாக டூர் ப்ரோகிராமை அறிவித்தார் என சுட்டிக்காட்டுகிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
CM Edappadi Planisamy is serious with TTV Dinakaran issue, whih is the reason why he couldn't enter AIADMK party office.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more