For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. அமைச்சர்களின் கல்வி தகுதி என்ன?

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையின் புதிய அமைச்சரவை பட்டியல் இன்று மாலை வெளியானது. இதில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில் ஜெயலலிதாவை தவிர்த்து மற்ற அமைச்சர்களின் கல்வித்தகுதி குறித்த பட்டியல் தரப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா 6-வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்.

Educational Qualifications of Ministers

பதவி ஏற்பு விழா வரும் 23-ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

1. ஜெயலலிதா - முதல்வர்

2. பன்னீர்செல்வம் - நிதி பி.ஏ.,

3. பி.தங்கமணி - மின்சாரம், மதுவிலக்கு பி.ஏ.,

4. எடப்பாடி கே.பழனிச்சாமி - பொதுப்பணி, நெடுஞ்சாலை பி.எஸ்சி.,

5. டி.ஜெயக்குமார் - மீன்வளம் பி.எஸ்சி., பி.எல்.,

6. கே.சி.வீரமணி - வணிகவரி பி.ஏ.,

7. வேலுமணி - உள்ளாட்சி எம்.ஏ., எம்.பில்.,

8. செல்லூர் ராஜு - கூட்டுறவு, தொழிலாளர் நலன் பி.எஸ்சி.,

9. எம்.சி.சம்பத் - தொழில்துறை பி.எஸ்சி.,

10. ஆர்.காமராஜ் - உணவு, இந்து அறநிலையத் துறை எம்.ஏ.,

11. ஆர்.பி.உதயகுமார் - வருவாய் துறை பி.காம்., எம்எஸ்டபிள்யு, பிஎல்.,

12. ராஜேந்திர பாலாஜி - ஊரகத்துறை பட்டப்படிப்பு இல்லை

13. சி.வி.சண்முகம் - சட்டம், சிறை, நீதிமன்றம் பி.எல்.,

14. எஸ்.பி.சண்முகநாதன் - பால்வளம் பட்டப்படிப்பு இல்லை

15. ஓ.எஸ்.மணியன் - ஜவுளி, கைத்தறி - பட்டப்படிப்பு இல்லை

16. சி.விஜயபாஸ்கர் - சுகாதாரம் எம்பிபிஎஸ்.,

17. மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பம் எம்பிபிஎஸ்., எம்.எஸ்.,

18. திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை எம்.ஏ., எம்பிஏ.,

19. கே.பி.அன்பழகன் - உயர்கல்வி துறை பி.எஸ்சி.,

20. சரோஜா - சமூக நலம், சத்துணவுஎம்பிபிஎஸ்., எம்டி., டிஜிஓ.,

21. கருப்பண்ணன் - சுற்றுச்சூழல் - பட்டப்படிப்பு இல்லை

22. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி, ஊரக வளர்ச்சி பி.காம்.,

23. துரைக்கண்ணு - விவசாயம் பி.ஏ.,

24. கடம்பூர் ராஜூ - தகவல், செய்தி மற்றும் விளம்பரம் டிடிஎட்

25. பெஞ்சமின் - பள்ளிக்கல்வி பி.ஏ.,

26. வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலா

27. ராஜலெட்சுமி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் எம்.எஸ்.சி., பிஎட்.,

28. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை பி.ஏ.,

29. வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலன் எம்.ஏ., பி.எட்.,எம்.பில்., பி.எல்., எம்.எல்.ஏ.,

English summary
Educational Qualifications of Ministers in tamilnadu Cabinet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X