For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உதயசந்திரனுக்கு ஆதரவாக கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளராக உள்ள உதயசந்திரன் மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலை வைத்து அரசின் முடிவிற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : தமிழக பள்ளிக் கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் செயலாளர் உதயசந்திரனை இடமாற்றம் செய்யக் கூடாது என்று கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நீட் நுழைவுத் தேர்வு அரசுக்கும் மக்களுக்கும் உணர வைத்த பாடம் தமிழக கல்வி முறை தரமானதாக இல்லை என்பதையே. இதன் காரணமாக பள்ளிக் கல்வித்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.

இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்தார். இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு, பாடத்திட்ட மாற்ற முடிவு, +1,+2 தேர்வு தேதிகளை அறிவித்தது என பல நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. இந்த மாற்றத்திற்கு பலரும் அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

 எதற்காக மாற்றம்?

எதற்காக மாற்றம்?

அரசு பள்ளிக்கல்வித்துறையில் கொண்டு வரவுள்ள இந்த மாற்றங்களுக்கு சொந்தக்காரர் பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர் உதயசந்திரன் என்று கூறப்படுகிறது. பள்ளிகல்வித்துறையில் பொறுப்பேற்று 5 மாதங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் உதயசந்திரன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், இதனால் அமைச்சர் செங்கோட்டையனுக்கான நற்பெயர் குறைந்து போயுள்ளதாக நினைப்பதன் எதிரொலியாக அவர் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 எதற்காக மாற்றம்?

எதற்காக மாற்றம்?

அரசு பள்ளிக்கல்வித்துறையில் கொண்டு வரவுள்ள இந்த மாற்றங்களுக்கு சொந்தக்காரர் பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர் உதயசந்திரன் என்று கூறப்படுகிறது. பள்ளிகல்வித்துறையில் பொறுப்பேற்று 5 மாதங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் உதயசந்திரன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், இதனால் அமைச்சர் செங்கோட்டையனுக்கான நற்பெயர் குறைந்து போயுள்ளதாக நினைப்பதன் எதிரொலியாக அவர் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 கீழடி தவறு மீண்டும் கூடாது?

கீழடி தவறு மீண்டும் கூடாது?

ஆனால் கீழடியில் மத்திய அரசு செய்த தவறை பள்ளிக் கல்வித் துறையில் தமிழ் நாடு அரசு செய்யக் கூடாது என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கல்வித் துறை செயலாளராக உதயசந்திரன் பொறுப்பேற்றவுடன் கல்வி கற்றல் சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 பணிகள் பாதிக்கும்

பணிகள் பாதிக்கும்

மிக முக்கியமாக, தமிழ்நாடு மாநில கல்வி திட்டம் (Curriculum), பாடத்திட்டம் (Syllabus), பாடநூல் (Textbook) எழுதும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.
21ஆம் நுற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்கிட மாநில பாடத்திட்டத்தினை மேம்படுத்திட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

 தனியார் கல்வி நிறுவனங்களின் சூழ்ச்சி

தனியார் கல்வி நிறுவனங்களின் சூழ்ச்சி

இத்தகைய சூழலில், இத்தகைய மாற்றங்கள் மாணவர்களை அரசுப் பள்ளியை நோக்கி ஈர்க்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பயம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. வணிக நோக்கில் செயல்படும் சில பள்ளி நிர்வாகங்களும், சுயநலனக்கூட்டமும் ஒரு சிறந்த அதிகாரியை அப்பணியில் இருந்து மாற்றிட துடிக்கின்றனர்.

 சீர்குலைக்கும் முயற்சி

சீர்குலைக்கும் முயற்சி

இவர்களின் தூண்டுதலின் பெயரில் தமிழ் நாடு அரசு உதயசந்திரனை பணி மாற்றம் செய்தால் அத்தகைய நடவடிக்கை நடந்து வரும் மாற்றங்களுக்கு பெரும் இடையூராக அமையும். தமிழ் நாடு அரசின் பாடத்திட்ட மேம்பாட்டு நடவடிக்கையை சீர்குலைக்கும் முயற்சியாகவே அதை கருத வேண்டும் என்றார்.

English summary
Educationist Princer Gajendra babu says that because of presuure from Private educational institution reformations making school education secretary Udhayachandran's transfertalks are going on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X