For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முட்டை, வெங்காயம் விலை வரலாறு காணாத உயர்வு.. ஆம்லெட் விலை டபுளாக உயர்வு

முட்டை, வெங்காயத்தின் விலை உயர்ந்துவிட்டதால் ஆம்லெட் விலை டபுளாகிவிட்டது.

By Mathi
Google Oneindia Tamil News

மதுரை: முட்டை மற்றும் வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் மதுரை சுற்றுவட்டார ஹோட்டல்களில் ஆம்லெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்வதாலும் வட இந்தியாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பதாலும் முட்டை விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வதைக்கும் கடும் குளிருக்கு இதமாக சூடாக முட்டைகளை சாப்பிடுவர்.

முட்டை நுகர்வு அதிகம்

முட்டை நுகர்வு அதிகம்

குளிர்காலங்களில் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் முட்டை விற்பனை மிகவும் அதிகரிக்கும். இதனால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் அதிகரிக்கும். தற்போது முட்டையின் கொள்முதல் விலை நாமக்கல்லில் ரூ4.84 காசு; மதுரை மாவட்டத்தில் 5.80 பைசாகவாக உள்ளது.

மதுரை விலை

மதுரை விலை

இதனால் சில்லறை விற்பனையில் 1 முட்டை ரூ6.50 முதல் ரூ7 வரை விற்பனை செய்யப்படுகிறது. முட்டையைப் போலவே வெங்காயத்தின் விலையும் கண்ணீரை வரவழைக்கிறது.

ஆம்லெட் விலை டபுள்

ஆம்லெட் விலை டபுள்

பெரிய வெங்காயத்தின் விலை ரூ70; சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ165 என விற்பனை செய்யப்படுகிறது. இப்படி முட்டை மற்றும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் ஹோட்டல்களில் ஆம்லெட்டின் விலையும் டபுளாக உயர்ந்துள்ளது.

திண்டுக்கல்லில் உயர்வு இல்லை

திண்டுக்கல்லில் உயர்வு இல்லை

மதுரை திருமங்கலம் பகுதியில் 1 ஆம்லெட்டின் விலை ரூ10-ல் இருந்து ரூ20 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் கரண்டி ஆம்லெட்டுக்கு பெயர் போன திண்டுக்கல்லில் விலை உயரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Now Omlet also very costly food item in Madurai hotels due to the prices hike of Egg and Onion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X