For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய வழக்கில் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன்!

பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய வழக்கில் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய வழக்கில் எஸ்வி சேகர் ஜூன் 20ஆம் தேதி ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஆளுநர் பன்வாரிலால் கடந்த மே மாதம் பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தடவிய சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவரான எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

Egmore court summons to SV Shekar in the reporter defamation case

பெண் பத்திரிக்கையாளரை இழிவாக விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்தார் எஸ்வி சேகர். அவரது அந்த அநாகரீகமான பதிவுக்கு பெண் பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி அனைத்து பத்திரிக்கையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்நது எஸ்வி சேகர் மீது பல்வேறு இடங்களில் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் எஸ்வி சேகரை கைது செய்ய தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த எஸ்வி சேகர் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் எஸ்வி சேகருக்கு முன்ஜாமீன் தரமுடியாது என கைவிரித்தது.

ஆனாலும் எஸ்வி சேகர் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் எஸ்வி சேகருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

ஜூன் 20 ஆம் தேதி எஸ்வி சேகர் நேரில் ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

English summary
Egmore court has summon to SV Shekar in the reporter defamation case. SV Shekar was talking defamation of female journalists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X