For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் உள்பட நாடு முழுவதும் நாளை ரம்ஜான்.. அன்று சுப்ரீம் கோர்ட்டுக்கும் விடுமுறை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்படுவது முன்னிட்டு வரும் 7ம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமையன்று ரமலான் கொண்டாடப்பட உள்ளதாக மத்திய அறிவித்திருந்தது. எனவே இன்று வழக்கம்போல் உச்சநீதிமன்றம் செயல்படும் என்று உச்சநீதிமன்ற பதிவாளர் ராஜேஷ்குமார் கோயல் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்று வேலை (6.07.2016) நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமையன்று ரமலான் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டின் ரமலான் நோன்பு நேற்றுடன் நிறைவடைவதால் திங்கட்கிழமை ஷவ்வால் மாதத்தின் முதல்பிறை மத்திய கிழக்கு நாடுகளில் தென்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் பிறை தோன்றவில்லை.

இதையடுத்து, சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் இன்று (புதன்கிழமை) ஈதுல் பித்ர் எனப்படும் ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என மேற்கண்ட நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏமன், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இன்று (புதன்கிழமை) ரமலான் பண்டிகை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல்பிறை தோன்றுவதற்கேற்ப அந்நாடுகளில் ரமலான் கொண்டாடப்படும். வழக்கமாக, சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் ரமலான் கொண்டாடிய மறுநாள்தான் இந்தியாவில் ரமலான் கொண்டாடப்படும்.

அவ்வகையில், இந்தியாவில் வரும் 7ம் தேதி (வியாழக்கிழமை) இங்கு ரமலான் கொண்டாடப்படும், எனினும், தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களை பொருத்த வரையில் அந்தந்த மாநில அரசுகளின் 'தலைமை காஜி'யின் அறிவிப்புக்கு இணங்க, அவர் குறிப்பிடும் நாளில் தான் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனிடையே ரமலான் பண்டிகையை ஒட்டி வரும் 7ம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வியாழக்கிழமையன்று ரமலான் கொண்டாடப்பட உள்ளதாக மத்திய அறிவித்திருந்தது. எனவே இன்று வழக்கம்போல் உச்சநீதிமன்றம் செயல்படும் என்று உச்சநீதிமன்ற பதிவாளர் ராஜேஷ்குமார் கோயல் தகவல் தெரிவித்துள்ளார்.

English summary
Media reports are suggesting that Eid al-Fitr in India it will be celebrated on July 7.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X