For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவருடன் நெருக்கமாக இருந்த தங்கை.. கூலிப்படையை ஏவி ‘தூக்கிய‘ அக்கா.. திருச்சியில் ஓர் சேஸிங்!

திருச்சியில் கணவருடன் நெருக்கமாக பழகிய தங்கையை அக்காவே கூலிப்படையை ஏவி கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    என்னோட கணவரையா மடக்கற...தங்கையை கடத்திய அக்கா- வீடியோ

    திருச்சி கணவருடன் நெருக்கமாக பழகிய தங்கையை அக்காவே கூலிப்படையை ஏவி கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி மாவட்டம் காஜா பேட்டையைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. கணவரை இழந்த அவர் தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

    புவனேஸ்வரி துலாக்குடி நகராட்சியில் பில் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடிந்து துலாக்குடி பேருந்து நிலையத்தில் புவனேஸ்வரி பேருந்துக்காக காத்திருந்தார்.

    விரட்டிய போலீஸ்

    விரட்டிய போலீஸ்

    அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று புவனேஸ்வரியை காரில் கடத்திச்சென்றது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் புவனேஸ்வரி கடத்தப்பட்ட காரை விரட்டினர்.

    சினிமா பாணியில் சேஸிங்

    சினிமா பாணியில் சேஸிங்

    போலீஸ் துரத்துவதை அறிந்த கடத்தல்காரர்கள் வேறு வழியில் தப்ப முயன்றனர். ஆனால் மூன்று கிலோ மீட்டர் தூரம் சினிமா பாணியில் விரட்டிச்சென்ற போலீஸ் காரை வழிமறித்தது.

     புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள்

    புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள்

    பின்னர் காரில் இருந்த புவனேஸ்வரியை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முனிஸ்வரன் உள்ளிட்டோர் என்பது தெரியவந்தது.

    கணவருடன் நெருக்கம்

    கணவருடன் நெருக்கம்

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புவனேஸ்வரியின் அக்காள் சரஸ்வதியே தங்கையை கடத்த சொன்னதாகவும் தாங்கள் கூலிப்படையாக செயல்பட்டதாகவும் அவர்கள் கூறினர். கணவரை இழந்த புவனேஸ்வரி தனது அக்காள் சரஸ்வதியின் கணவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

    அக்காள் கைது

    அக்காள் கைது

    தனது கணவருடன் தங்கை நெருங்கி பழகுவதை அறிந்த அக்காள் சரஸ்வதி கணவரை கூலிப்படையை ஏவி கடத்தி மிரட்டச் சொல்லியுள்ளார் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சரஸ்வதி உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.

    சினிமா காட்சிகளை போன்று

    சினிமா காட்சிகளை போன்று

    அவர்கள் மீது ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதும் அவர்களை போலீசார் விரட்டி பிடித்ததும் சினிமா காட்சிகளை போன்று இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Elder sister setup Mercenary to kidnap younger sister to rescue her husband. Police chased the car and arrested the mercenary.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X