For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆவின் முதல் பியூட்டி பார்லர் மீனா ஆண்ட்டி வரை.. 100% இலக்குக்காக போராடும் தேர்தல் ஆணையம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் இம்முறை எப்படியும் 100 சதவீத வாக்குப்பதிவை நடத்திக் காட்டுவது என தீயாக வேலை செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.

தமிழகத்திற்கு சட்டசபைத் தேர்தல் இம்மாதம் 16ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது தேர்தல் ஆணையம்.

அது மட்டுமின்றி முன் எப்போதும் இல்லாத அதிகப்படியாக, அதாவது 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்குடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.

விளம்ரம்...

விளம்ரம்...

ஆவின் பால் பாக்கெட் முதல் பஸ் ஸ்டாப் வரை அனைத்து இடங்களில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்களை வைத்துள்ளது தேர்தல் ஆணையம். அதுமட்டுமின்றி, சீரியல் பார்க்கும் லட்சுமியக்கா, காலேஜ் போகும் கார்த்திக், பியூட்டி பார்லர் போகும் மீனா ஆன்டி என விதவிதமான விளம்பரங்களையும் அது வெளியிட்டுள்ளது.

கமலுக்கு பதிலடி...

கமலுக்கு பதிலடி...

தேர்தல் ஆணையத்தின் இம்முயற்சி பாராட்டப்பட வேண்டியது தான். கமல் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் கூறிய சில மணி நேரங்களிலேயே, அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை ஆதாரத்துடன் வெளியிட்டு, தனது சின்சியாரிட்டியை காண்பித்தது தேர்தல் ஆணையம்.

100% இலக்கு...

100% இலக்கு...

கடந்த சட்டசபைத் தேர்தலில் தான் அதிகபட்சமாக 78.01 சதவீதம் வாக்குகள் பதிவானது. எனவே, இம்முறை அதையும் தாண்டி சாதித்துக் காட்டுவது என மும்முரமாக செயல்பட்டு வருகிறது தேர்தல் ஆணையம்.

முந்தைய தேர்தல்கள்...

முந்தைய தேர்தல்கள்...

அதற்கும் முந்தையத் தேர்தல்களில் பதிவான வாக்குகளின் விபரம் சதவீதத்தில்...

1. 1952 - 55.34
2. 1957 -46.56
3. 1962 - 70.65
4. 1967 - 76.57
5. 1971- 72.10
6. 1977- 61.58
7. 1980 - 65.42
8. 1984 - 73.47
9.1989 - 69.69
10. 1991 - 63.84
11. 1996 - 66.95
12. 2001 - 59.07
13. 2006 - 70.82
14. 2011 - 78.01

பிரச்சாரம்...

பிரச்சாரம்...

மேலும், மே, 14ம் தேதியோடு வேட்பாளர்களின் பிரசாரம் நிறைவடைகிறது. அதனைத் தொடந்து 15ம் தேதி முழுவதும், மே 16ம் தேதி ஓட்டுப்போட வரும்படி, பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து பிரசாரம் செய்ய, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Election commission has set target of 100 percent polling in this assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X