For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் முடிவுகள் எதிரொலி: அண்ணா அறிவாலயம் வெறிச்சோடியது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Election result 2014: DMK headquarters in Chennai wears a deserted look
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு படுதோல்வி என அறிவிக்கப்பட்டு வருவதால் திமுக தலைமைக்கழக அலுவலகமான அண்ணா அறிவாலயம் களை இழந்து காணப்படுகிறது.

லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குவதற்கு முன்பிருந்தே திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவியத் தொடங்கினர்.

காலை 8.00மணியளவில் தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கியபோது அதிமுக முன்னணி பெற்ற தொகுதிகள் நிலவரம் அறிவிக்கப்பட்டபோது கூடியிருந்த திமுக தொண்டர்கள் முகம் சோகத்தில் அப்பியது.

தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிந்து முதல் சுற்று நிலவரம் அறிவிக்கப்பட்டபோது,அதிமுக அதிக இடங்களில் முன்னணியில் இருப்பதாகத் தெரிந்ததும் திமுக தொண்டர்கள் பலரின் முகம் சுத்தமாக மாறிப்போனது.

தொடர்ந்து அதிமுக 35 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக அறிவிக்கப்பட்டது. பாஜக இரண்டு தொகுதிகளில் முன்னணி என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பிரதான கட்சியான திமுக ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிப்பதாக அறிவிக்கப்படவில்லை. திமுக வெற்றிபெறப்போவதில்லை எனத் தெளிவாகத் தெரிந்ததும் தொண்டர்கள் ஒவ்வொருவராகக் கலையத்தொடங்கிவிட்டனர்.

காலை 10.30 மணியளவில் பெரும்பாலான தொண்டர்கள் கலைந்துபோய் அறிவாலயமே வெறிச்சோடத் தொடங்கியது.

மீதமிருந்த சில தொண்டர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் "இப்படி ஆயிடுச்சே. இப்படி ஆயிடுச்சே' என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பத்து சீட்டாவது வரும்னு எதிர்பார்த்தோம் ஒத்த சீட்டாவது கிடைக்குமா தெரியலையே என்றனர் திமுகவினர்.

English summary
DMK headquarters Anna Arivalayam wore a deserted look as news of party candidates trailing in most constituencies in Tamil Nadu started to trickle in on Friday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X