For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்ச்க்குள் ரயில் பாதை மின்மயமாக்கும் பணி பணி முடிந்துவிடும்.. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்!

மார்ச் மாதத்துக்குள் ரயில் பாதையை மின்மயக்கும் பணி நிறைவடைந்துவிடும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷித்ரா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மார்ச் மாதத்துக்குள் ரயில் பாதையை மின்மயக்கும் பணி நிறைவடைந்துவிடும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷித்ரா தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷித்ரா சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 2017-2018 நிதியாண்டில் டிசம்பர் வரை ரூ.5624 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.

Electrical lines for railway are being carried out rapidly: RK Kulshresthra

ஏப்ரல் முதல் ஜூன் வரை 500 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் குல்ஷித்ரா தெரிவித்தார். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மேலும் கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என்றும் குல்ஷித்ரா தெரிவித்தார்.

ரயில் பாதைகள் மின்மயமாக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பெட்டிகளிலும் பயோ டாய்லெட் அமைக்கப்படும் என்றும் குல்ஷித்ரா தெரிவித்தார்.

பஸ் ஸ்ட்ரைக் காலத்தில் கூடுதலாக 13 லட்சம் பேர் ரயில்களில் பயணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆளில்லா ரயில்வே கேட் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் மூடப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் சரக்கு ரயில் வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் 52 கோடி அதிகம் என்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷித்ரா தெரிவித்தார்.

English summary
suthern railways general manager RK Kulshresthra said that the electrical lines for railway are being carried out rapidly. It will be complete within march. and he said We will have a bio toilet in all the boxes of the train by the end of this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X