For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவாலங்காடு அருகே உயர் மின் கம்பி அறுந்தது : சென்னை - ஜோலார்பேட்டை இடையே ரயில் சேவை பாதிப்பு

திருவள்ளூர் அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால், சென்னை - ஜோலார்பேட்டை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகேயுள்ள திருவாலங்காடு என்கிற இடத்தில் உயர் அழுத்த கம்பிகள் அறுந்து ரயில் பாதையில் விழுந்ததால், சென்னை - ஜோலார்பேட்டை மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அருகே திருவாலங்காடு என்கிற இடத்தில் 25 ஆயிரம் வாட்ஸ் திறன் கொண்ட உயர் மின்னழுத்த கம்பி அறுந்து ரயில் பாதையில் விழுந்ததால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Electrical wire breakdown near Thiruvallur

சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து, அறுந்து கிடந்த மின்சார கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடந்த இரண்டு மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை - ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டு, அந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஏற்கனவே, கடந்த 30ம் தேதி மாலை ஜோலார்பேட்டை அருகே மின்சார உயர் அழுத்தக் கம்பி விழுந்து, அந்தப்பாதையில் 5 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அப்போது மின்வாரிய அதிகாரிகள் முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாததே, விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Electrical wire breakdown near Thiruvallur. Train service stopped from chennai to Jolarpet. High Tension Electric cable breakdown at Thiruvalangadu near Thiruvallur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X