For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'விஐபி' என்ஜினியர்களே.. இந்தியாவில் எங்கு வேலை கிடைத்தாலும் ஓகேவா? இங்கே விண்ணப்பிக்கலாமே நீங்க!

அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 66 கிராஜூவேட் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 66 கிராஜூவேட் என்ஜினியர் ட்ரெய்னி பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதிக்குள் 25 வயது பூர்த்தியடைந்த பிஇ, பிடெக் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் படிப்புகளுக்கான மவுசு குறைந்ததற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் கிடைக்காதது என்று சொல்லலாம். அப்படி படித்து முடித்து வேலை கிடைக்க வில்லை என்ற கவலையில் இருக்கும் விஐபி என்ஜினியரா நீங்கள். உங்களுக்காகத் தான் இந்த அறிவிப்பு.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் 66 கிராஜூவேட் என்ஜினியர்களை பயிற்சி அடைப்படையில் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் முறையில் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

யார் விண்ணப்பிக்கலாம்

யார் விண்ணப்பிக்கலாம்

நவம்பர் 30ம் தேதியுடன் 25 வயது பூர்த்தியடைந்த சிவில், மெக்கானிக்கல்,கெமிக்கல், இசிஇ, ஈஈஈ, சிஎஸ்ஈ போன்ற பிரிவுகளின் கீழ் படித்து முடித்த பிஇ, பிடெக் பட்டதாரிகள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். இளநிலை பொறியியல் படிப்பை முடித்து விட்டு முதுநிலை படித்துக் கொண்டிருப்பவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ‘‘http://careers.ecil.co.in'' or "http://www.ecil.co.in" என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 21.12.2017. என்ஜினியர் பணிக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு ஜனவரி 7ம் தேதி வாக்கில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும்.

ஜனவரியில் ஆன்லைன் தேர்வு

ஜனவரியில் ஆன்லைன் தேர்வு

கணினி வழியில் நடத்தப்படும் தேர்வு தமிழகத்தில் சென்னை, திருச்சியில் மட்டுமே நடத்தப்டுகிறது. அண்டை மாநிலங்களை பொறுத்தவரையில் திருவனந்தபுரம், ஹைதராபாத், திருப்பதி, பெங்களூரு, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களிலும் நடத்தப்படுகிறது. ஆன்லைனில் வெற்றி பெறுபவருக்கு நேர்காணல் நடத்தப்பட்டு பின்னர் இந்தியாவின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஓராண்டு பயிற்சி காலத்தின் போதே ஸ்ட்ரைப்ன்டாக மாதம் ரூ. 38 ஆயிரம் வரை வழங்கப்படும். ஓராண்டு பயிற்சி முடித்து பொறியாளராக பணியமர்த்தப்பட்டால் ரூ. 48 ஆயிரம் வரை சம்களம் வழங்கப்படும். மத்திய அரசுப் பணிக்காக காத்திருக்கும் என்ஜினியர்களே இதையும் ஒரு ட்ரை பண்ணிப் பார்க்கலாமே.

தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் போது செய்ய வேண்டியவை செய்யப் கூடாதவை உள்ளிட்ட விவரங்கள் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

English summary
Electronics Corporation of India Limited a leading Public Sector Company has over 66 job openings for engineers all over India. How to apply for it here is the full detail
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X